SRI VANCHA KALPALATA GANAPATHI HOMAM | ஸ்ரீ வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம்
This is a high-level ritual to be used for impossible problems: a ritual that makes the impossible possible.
இது சாத்தியமில்லாத சிக்கல்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய உயர்நிலை சடங்கு. சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் சடங்கு முறை.

தியானம் / Dyanam
த்வாப்யாம் விப்ராஜமானம் த்ருதகலச மஹாஷ்ருங்கலாப்யாம் புஜாப்யாம் பீஜாபூராதி விப்ராத் தசபுஜமருணம் நாகபூஷம் த்ரிநேத்ரம் ।
சந்தியாசிந்தூரவர்ணம் ஸ்தனபரனமிதம் துந்திலம் ச்சந்திரசூடம் கண்டதூர்த்வம் கரீந்திரம் யுவதிமயமதோ நௌமி வித்யாகாணேஷம் ॥
dvābhyāṁ vibhrājamānaṁ dhṛtakalaśa mahāśṛṅkhalābhyāṁ bhujābhyāṁ bījāpūrādi vibhrad daśabhujamaruṇaṁ nāgabhūṣaṁ trinetram |
sandhyā-sindūravarṇaṁ stanabharanamitaṁ tundilaṁ candracūḍam kaṇṭhādūrdhvaṁ karīndraṁ yuvatimayamadho naumi vidyāgaṇeśam ||
द्वाभ्यां विभ्राजमानं धृतकलश महाशृङ्खलाभ्यां भुजाभ्यां बीजापूरादि विभ्रद् दशभुजमरुणं नागभूषं त्रिनेत्रम् ।
सन्ध्यासिन्दूरवर्णं स्तनभरनमितं तुन्दिलं चन्द्रचूडम् कण्ठादूर्ध्वं करीन्द्रं युवतिमयमधो नौमि विद्यागणेशम् ॥
கலசத்தையும், மஹாச்ருங்கலையையும், மாதுளை முதலியவற்றைத் தாங்கும் கைகளால் விளங்குபவரும், உதய ஸூர்யனின் நிறமுடையவரும், பாம்புகளை அணிகளாக உடைய வரும், முக்கண்களை உடையவரும், ஸந்த்யா காலத்திலுள்ள ஸிந்தூர நிறத்தவரும், ஸ்தனங்களின் பாரத்தால் குனிந்தவரும், தொந்தி உடைய வரும், சந்த்ரனைச் சூடியவரும், கழுத்திற்குமேல் யானையாகவும், கீழே மங்கை உருவாகவும் உள்ள வித்யா கணேசியை வணங்குகிறேன்.
I offer my respects to Vidya Ganesha, who is depicted with a kalash, a generous alms bowl, and a pomegranate, who shines with the radiance of the rising sun, who is adorned with serpents, who possesses three eyes, who embodies the color of twilight vermilion, who is gracefully curved by the weight of her breasts, who wears a garland, who is adorned with the moon, and whose form combines the head of an elephant with the body of a maiden.

ஸ்ரீ வித்யா கணபதி விக்ரஹத்தின் தத்துவம்:-
பகவானுக்குப் பன்னிரு திருக்கரங்களும் துதிக்கையுமாக பதிமூன்று திருக்கரங்கள் உள்ளன. வலது திருக்கரங்களில் கீழிருந்து மேலாக
1. அம்ருத கலசம் (காமேச்வரர்),
2. மாதுளை (மஹாகணபதி),
3. கதை (ஸூர்ய நாராயணர்),
4. கரும்புவில் (மன்மதன்),
5. சூலம் (பரம சிவன்),
6. சக்ரம் (மஹாவிஷ்ணு).
இடது திருக்கரங்களில் மேலிருந்து கீழாக,
7. சங்கு (மஹா லக்ஷ்மி),
8. பாசக்கயிறு (பரமேச்வரி),
9. உத்பல புஷ்பம் (ரதி),
10. நெற்கதிர் (சாயா – ஸுவர்சலை),
11. உடைந்த தந்தம் (வல்லபாம்பாள்),
12. மஹா ச்ருங்கலா (காமேச்வரி),
13. துதிக்கையில் ரத்ன கலசம் (நிர்குண ப்ரஹ்மம்).
14. வலது கண் – ஸூர்யன்,
15. இடது கண் – சந்த்ரன்,
16. நெற்றிக் கண் – யோகாக்னி
ஆக இந்த பதினாறும் ஸ்வாமியிடம் ஷண் மதங்களையும், மாயையையும், நிர்க்குண ப்ரஹ்ம தத்துவத்தையும், பஞ்ச க்ருத்யங்களையும் (தொழில்கள்) விளக்குகின்றன.
2,11 – காணாபத்யம் – அனுக்ரஹம்
4,9,15 – சாக்தம் – ஸ்ருஷ்டி
16. கெளமாரம் – ஸம்ஹாரம்:
5,8 – சைவம் – ஸம்ஹாரம்
6,7 – வைஷ்ணவம் – ஸ்த்திதி
3,10,14 – ஸௌரம் – திரோதானம்
1,12 – மஹாமாயா – மாயா தத்வம்
13,16 – நிர்குண ப்ரஹ்மம் – ப்ரஹ்ம தத்வம்
ஷண் மதங்கள்:-
1. காணாபத்யம் – மாதுளம் பழமும், தன்னுடைய உடைந்த தந்தமும்
2. கௌமாரம் – நெற்றிக்கண்
3. சாக்தம் – கரும்புவில், உத்பல புஷ்பம், இடது கண்ணான சந்திரன்
4. சைவம் – சூலமும், பாசக்கயிறும்
5. வைஷ்ணவம் – சங்கும், சக்ரமும்
6. ஸௌரம் – கதை, நெற்கதிர், வலது கண்ணான சூரியன்
ஐந்து தொழில்கள் :-
1. ஸ்ருஷ்டி – கரும்புவில், உத்பல புஷ்பம், இடது கண்ணிலுள்ள சந்திரன்
2. ஸ்திதி – சக்ராயுதமும், சங்கும்
3. ஸம்ஹாரம் – சூலமும் பாசக்கயிறும்
4. திரோதானம் -கதை, நெற்கதிர், வலது கண்ணிலுள்ள சூரியன்
5. அனுக்ரஹம் -மாதுளம் பழம், உடைந்த தந்தம்
மஹாமாயா – அம்ருத கலசம் மஹாச்ருங்கலை
நிர்குண ப்ரஹ்மம் – நெற்றிக் கண்ணின் யோகாக்னி, ரத்ன கலசம்.
ஸ்ரீ வித்யா கணபதி மூர்த்தித் தத்துவம்:-
மூர்த்தியின் ஸ்வரூபம் கழுத்திற்கு மேல் யானை முகமும், கழுத்திற்கு கீழ் மங்கை உருவமும் கொண்டது.
ஸ்ரீ மஹாகணபதியிலும் ஸ்ரீ மஹாஷோடசியிலும் தனித் தனியாக இருந்த ப்ரஹ்மமும், ப்ரஹ்ம சக்தியும் ஒன்றாகி கழுத்திற்கு மேல் யானை முகத்துடனும் கழுத்திற்குக் கீழ் மங்கை உருவத்துடனும் காட்சி அளிக்கிறார்கள்.
யானை முகம்- ஸ்ரீ மஹாகணபதி – சிவ ப்ரஹ்ம ஸ்வரூபம். கழுத்திற்குக்கீழ் மங்கை உருவம் – ஸ்ரீ மஹாஷோடசீ சக்தி – ப்ரஹ்ம சக்தி ஸ்வரூபம்.
ப்ரஹ்மமும் ப்ரஹ்ம சக்தியும் ஒன்றாகி ஒரே உடம்பாகி விட்டன.
இங்கு மேலே சொன்ன மற்றொரு ஸூக்ஷ்மத்தையும் நாம் கவனிக்க வேண்டும். ‘ப்ரஹ்மசக்தி’ ப்ரஹ்மத்தினுள் அடங்கும். ப்ரஹ்மம் ப்ரஹ்ம சக்தியில் அடங்காது.
(இதைத்தான் ‘நானின்றி அவளில்லை அவளின்றி நானுண்டு’ என அடிக்கடி நான் சொல்வதுண்டு). ஏனெனில் சத்தியவள் சிவனில் ஐக்கியமாக சவமாக உள்ள இந்த உடல் சிவமாக வேண்டும். நாம் சிவமாக சத்தியே தானாக உதவுவாள்.
ப்ரளயத்தின் போது ப்ரஹ்ம சக்தி மஹா ப்ரஹ்மத்தினுள் செயலற்று ஒடுங்கி விடுகிறது. நிர்குண ப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்று ஆகிவிடுகிறது. இந்த தத்வத்தை நாம் கற்பனை செய்து பார்க்கலாமேயொழிய அனுபவிப்பது என்பது முடியாது – ஏனென்றால் ஸ்ருஷ்டிக்கு முன்னும் லயத்திற்குப் பின்னும் ஒரு அனுபவமும் இல்லை. ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இல்லாத நிலையில் ப்ரஹ்ம சக்திக்கு இருப்பு இல்லை.
கழுத்திற்கு மேல் யானைமுகமும், கழுத்திற்குக் கீழ் மங்கை உருவமும் படைப்பிற்குப் பொருந்தாதது. மங்கையின் உடம்பு யானைத் தலையைத் தாங்காது. ஆனால் இங்கு தாங்குகிறது. இவ்வாறு இயற்கை வரையறைகளுக்கு அப்பாற்பட்டு, நிர்குண ப்ரஹ்மத்திற்குரிய சில நிலைகள் வந்துவிடுவதாலேயே அத்வைத நிலைக்கு முந்தைய கடைசி நிலை இது என சொல்கின்றோம்.
யானைத் தலையைக் கவனித்தால் வலது பக்கம் தந்தம் இல்லாமல் பெண் யானையாகவும், இடது பக்கம் தந்தத்துடன் ஆண்யானையாகவும் உள்ளது. ‘அர்த்தநாரீச்வர ஸ்வரூபத்திலோ இடது பக்கம் பெண்ணாகவும், வலது பக்கம் ஆணாகவும் உள்ளது. இங்கு அந்த நியதியும் மாறிப் புதுமையாக உள்ளது.
கழுத்திற்குக் கீழ் மங்கை உருவம் என்பதும் லக்ஷணங்களுக்குப் புறம்பாகவே உள்ளது. பெண்களின் அழகே கொடியிடை. இங்கோ ஸ்ரீ வித்யாகணபதி பருத்த தொந்தியுடன் இருக்கிறார். பெண்கள் நளினமான ஆபரணங்களையே அணிவர். இங்கு இவரோ கொடிய விஷயப் பாம்புகளை ஒட்டியாணமாகவும், வளையல்களாகவும் அணிந்துள்ளார்.
இரண்டு கண்களுடன் இல்லாமல், யோகிகளும் ஸித்த புருஷர்களும் த்யானம் செய்யக்கூடிய மூன்றாவதான நெற்றி நடுவில் யோக (அக்னி) நேத்ரத்தையும் கொண்டுள்ளார்.
இப்படி பல விதங்களில் நிர்குண ப்ரஹ்மத்தின் நிலையை நெருங்குவதால் ‘அத்வைத’ நிலைக்கு முந்தைய கடைசி நிலை இது என்கிறோம்.

ஸ்ரீ வாஞ்சாகல்பலதா’ என்ற சொல்லுக்கு ஸ்ரீகுரு கொடுத்த விளக்கங்கள் :-
1. ‘ஸ்ரீ வாஞ்சாகல்பலதா’ என்பதற்குக் கற்பகக் கொடி போல், தெய்வீக அருள் நிறைந்த, விரும்பியதைக் கொடுக்கக் கூடிய, தெய்வீகக் கொடி என்று பொருள்.
2.வாஞ்சா– ‘வாஞ்சா’ என்றால் விருப்பம் அல்லது ஆசை.
விருப்பம், ஆசை ஜீவனுக்கு எப்படி ஏற்படுகிறது? என்பது கேள்வி.
‘வாஸனா’ என்பதுதான் ஒவ்வொரு ஜீவனின் விருப்பு, வெறுப்புகளுக்கு மூல காரணமாக இருப்பது. ஒவ்வொரு ஜீவனும் பல பிறவிகளில் பல உடல்களை அடைந்து பல நற்செயல்கள், தீய செயல்கள் செய்து, கால க்ரமத்தில் உடலை இழந்து, மறுபிறவி எடுக்கின்றது. ப்ரஹ்ம சக்தி நற்செயல்களையும், தீய செயல்களையும் முறையே ஸத்வாஸனா, துர்வாஸனா என்ற பதிவலைகளாக மாற்றி அந்தந்த ஜீவசக்தியில் ஏற்றிவிடுகின்றது. இந்த வாஸனைகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு ஜீவனின் மறுபிறவியும் நிர்ணயமாகின்றது. ஸத்வாஸனைகள் அதிகமாக இருந்தால் உயர்ந்த பிறவி, துர்வாஸனைகள் அதிகமாக இருந்தால் தாழ்ந்த பிறவி கிடைக்கிறது. ஜீவனின் பரம லக்ஷ்யமான மோக்ஷத்தை அடைவதற்கு பல பிறவிகளில் ஏற்படுத்திக் கொண்ட வாஸனைகளை அழிக்க வேண்டும். ‘வாஸனாக்ஷயம் ஸித்திக்காமல் மோக்க்ஷம் ஸித்திக்காது.
மனத்தின் இயல்பான ஸங்கல்ப விகல்பங்களை எழாமல் பலனற்றதாக்கி, மனோநாசம் செய்து, காலக்ரமத்தில் பிறவியை முடித்ததும், ஜீவனில் வாஸனாசம் ஏற்பட்டு முக்தியை அடைகிறான்.
3. கல்பம் – அந்த மனோநாச நிலைக்கு நாம் உயர முதலில் தீய எண்ணங்களைக் குறைத்து, முழுதும் நல்ல எண்ணங்களாக மாற்றி ஸத்விஷயங்களிலும், ஈச்வரனது ஸகுண மந்த்ர ஸ்வரூபங்களிலும் மனதை த்யானிக்கச் செய்ய வேண்டும். அந்தத் தீய எண்ணங்களை முதலில் நல்ல எண்ணங்களாக மாற்றப் பயன்படும் மருந்துதான் கல்பம். ஸாதகனின் மனத்தில் உள்ள எல்லா தீய எண்ணங்களையும் அழிக்கிறது. அந்த இடத்தில் நல்ல எண்ணங்களைக் கொண்டு வந்து ஈச்வரனின் ஸாத்விகமான ஸகுண மந்த்ர ஸ்வரூபங்களை த்யானிக்கிறது. ஸாதகன் பக்குவமடைய பக்குவமடைய அந்த உபாஸனா ஸகுண ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தால் அதனுடைய உண்மையான அழியாத எங்கும் நிறைந்த நிர்குண ஸ்வரூபத்தை உணர்ந்து மனோநாசத்தையும் வாசனாசயத்தையும் பெற்று மோ நிலையை அடைய வைக்கிறது.
4. லதா- ‘லதா’ என்றால் மிகவும் உயர்ந்தது. இந்த பிறவிப் பிணி என்ற பெரிய வியாதியைப் போக்கக் கூடிய மிகவும் உயர்ந்ததான மா மருந்து ‘ என்று பொருள்.
வாஞ்சாகல்பலதா உபாசனையானது முன் யுகங்களில் யோகிகளாலும், ஸித்த புருஷர்களாலும், ரிஷிகளாலும் மிகவும் ரகசியமாகவும் ச்ரத்தையாகவும் போற்றி வாய் வழியாகவே பாதுகாக்கப்பட்டு வந்த மந்த்ர ஸம்ஹிதைக்கு ‘வாஞ்சாகல்ப ஸம்ஹிதை என்று பெயர்.
(தற்போது நியமம் இல்லாததால் அந்த ஸம்ஹிதை அழிந்து போய்விட்டது).
இதில் மோக்ஷ பர்யந்தம், ஸகல விதமான புருஷார்த்தங்களையும் தரக்கூடிய கோடிக் கணக்கான மந்த்ரங்களும், க்ரமங்களும், நியமங்களும் கூறப் பட்டிருக்கும். அந்த கோடிக்கணக்கான மந்த்ரங்களில் மிகவும் சிறந்ததான (‘லதா’) கொடிபோன்ற மந்த்ரமே ‘ஸ்ரீ வித்யா கணபதி மந்த்ரம்’ அல்லது ஸ்ரீ வாஞ்சா கல்ப கணபதி மந்திரம் என்று பொருள்.
கலிகால பீடையிலிருந்து தகுதிவாய்ந்த ஆத்மாக்களை காக்க வேண்டியே எனது ஸ்ரீ குரு இந்த உபாசனை தீட்க்ஷையை 35 வருடங்களுக்கு முன் எனக்கருளினார். நானும் விபரமறியாமல் பயிற்சி செய்து வந்தேன். ஸ்ரீ குருவின் உத்தரவில் கடந்த 6 மாதங்களாக மீண்டும் சமூகநலன் கருதி இப்போது பயன்பாட்டில் கொண்டுவருகிறோம்.
இந்த மந்த்ரத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு.
1. மஹாமந்த்ரங்களான பாலா, பஞ்சதசீ என்ற இரண்டு ப்ரஹ்ம சக்திகளும், ஸ்ரீ மஹாகணபதி, க்ஷிப்ர கணபதி, இந்திர காயத்ரீ, ப்ரஹ்ம காயத்ரீ, ம்ருத்யஞ்சய, துர்கா ஸூக்தம், ரிக் வேத அக்னி ஸூக்தம், கணபதி பிரார்த்தன என்ற ப்ரஹ்ம ஸ்வரூபங்களால் “ஸம்புதீகரணம்” செய்யப்பட்டது.
இந்த ஸூக்ஷ்மத்தை மந்த்ர சாஸ்த்ரம் அறிந்த குருமார்களிடமிருந்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

இது சாத்தியமில்லாத சிக்கல்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய உயர்நிலை சடங்கு. சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் சடங்கு முறை.
ஸ்ரீ வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம் 444 பஞ்ச யக்ஞ ஹோமத்திற்கு இணையானது. பஞ்ச யக்ஞ ஹோமப் பலன்கள்:
1. கணபதி ஹோமம் – தடைகள் விலகி சகல செல்வங்களும் கிடைக்கும்.
2. மகாசண்டி ஹோமம் – பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.
3. நவக்கிரக ஹோமம் – கிரக தோசங்களை நீக்கும்.
4. மகாசுதர்சன ஹோமம் – ஏவல், பில்லி சூனியம், எதிரிகளை அழிக்கும், வெற்றி கிட்டும்.
5. ருத்ர ஹோமம் – ஆயுள் விரித்தியடையும். ஹோமங்கள் செய்து நலமுடன் வாழ்வோம்.
இந்த ஹோமம் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும், மனம் மற்றும் உடல் ஆற்றலை குணப்படுத்தி சமநிலை படுத்தவும், செல்வச் செழிப்புக்காகவும் செய்யப்படுகிறது.
ஸ்ரீ வாஞ்சா கல்பலதா ஸ்ரீ வித்யா மஹா கணபதி ஹோமம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த தீ சடங்கு (யாகம்) ஆகும். ஸ்ரீவித்யா உபாசனை மற்றும் மஹா கணபதி மூல மந்திர ஜபத்தையும், அனைத்து உயர் தெய்வீக ஆற்றல்களையும் ஒருங்கே உள்ளடக்கிய ஒரு அரிய வகை ஹோமம் ஆகும்.
மூன்று குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ்) அடங்கிய ஆத்ய சாதனா என்பதால் இது மிகவும் மங்களகரமான சடங்கு. வேத பாசுரங்களில் மருதுகளின் இறைவன் என புகழப்படுபவர். மருதகணா என்றும் சில சமயங்களில் ருத்ர தெய்வமாக அடையாளம் காணப்படுவார். ஆதிசக்தியாக ஆதிசிவனின் ஒருமித்த உயர்சக்தி ஆற்றல். ஸ்ரீ வாஞ்சா கல்பலதா பிரயோகத்தின் அதிஷ்டான தேவதை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அல்லது துர்கா தேவி ஆவார்.
நமது ஆசைகளை நிறைவேற்றி, ஆன்மிகப் பாதையைக் காட்டும் ஆற்றல் அவளுக்கு உண்டு. தடங்கள்களின் தடுமாற்றம் மற்றும் தடைகள் நீக்கி, நோய்களை குணப்படுத்தி, நல்ல தொழிலை வழங்குவாள், திருமண தாமதங்களை நீக்குகிறாள், உறவுகளை மேம்படுத்துகிறாள், நிதி சிக்கல்களைத் தீர்க்கிறாள், ராகு மற்றும் கேது தோஷங்களின் தோஷங்களை நீக்குகிறாள். கர்மவினைப் பதிவுகளை ஒதுக்கி செல்வச் செழிப்பு மற்றும் பொருள் வளம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றை ஒருசேர வழங்குகிறாள்.
This is high-end ritual must use for impossible issues to make it possible. Impossible becomes possible. A ritual that makes the impossible possible.
It is equivalent to 444 pancha yajna homas. Benefits of Pancha Yajna Homam:
1. Ganapati Homam – Obstacles are removed and all wealth is obtained.
2. Maha Chandhi Homam – Fear, poverty, enemies will be removed.
3. Navagraha Homam – Removes planetary doshas.
4.Mahasudarsana Homam – Evil, Witchcraft, Destroys Enemies, Gets Victory.
5. Rudra Homam – Extends life. Let’s do homam and live well.
This Homam is performed for attracting good fortune, healing mental and physical imbalance, and for wealth and prosperity.
Sri Vancha kalpalatha Srividya Ganapathi Homam is a very powerful fire ritual for wish-fulfillment. It is very effective, and it is also a rare kind of Homam, as it comprises Srividya Upasana and Maha Ganapathi Moola Mantra Japa.
It is a very auspicious ritual as it is the Adya Sadhanas comprising the three Gunas (Sattva, Rajas, Tamas). He is the Lord of Maruts in Vedic hymns. Also known as the Marutagana and sometimes identified with Rudras, are storm deities and sons of Rudra and Prisni. The Adhishtana Devata of Vancha Kalpalatha Prayoga is Goddess Tripurasundari or Durga.
She has the power to grant our desires and show us the spiritual path. She gets rid of obstacles and hurdles, cures ailments, bestows a good career, removes delays in marriage, improves relationships, resolves financial problems, and eliminates the malefic effects of Rahu and Ketu Doshas. She can also bestow prosperity, wealth and material abundance, and spiritual progress.
Generally Vancha Kalpalatha Ganapati Homam includes Ganapati Pooja, Punyaha Vachanam, Maha Sankalpam for Devotees, Kalasa Pooja, Navagraha Pooja, Sri Vancha Kalpalatha Ganapati Japam, Sacred Homam, Poornahuti and offerings to Ganapati.
பொதுவாக வாஞ்ச கல்பலதா கணபதி ஹோமத்தில் கணபதி பூஜை, புண்யாஹ வாச்சனம், பக்தர்களுக்கான மகா சங்கல்பம், கலச பூஜை, நவக்கிரக பூஜை, ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதி ஜப புனித ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் கணபதிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை அடங்கும்.
THIS HOMAM WILL BE FORMED WITH RARELY THINGS (ASHTA SAMITHUS) EIGHT TYPES OF WOODEN STICKS & WOODEN STRIPES, ASHTA DRAVYA (Liquids) ABHISHEKA MATERIALS AND ASHTA NEIVETIYA WITH ASHTA FLOWERS.
அஷ்ட சமிதுகள், அஷ்ட திரவங்கள், அஷ்ட அபிஷேகப் பொருட்கள் மற்றும் அஷ்ட மலர்கள், அஷ்ட நெய்வேத்தியம் போன்ற அரிதான பொருட்களை உபயோகித்து இந்த ஹோமம் செய்யப்படுகிறது.
ANCIENT YOGIS SAYS & ADVICE THAT EVERYONE MUST DO THIS POOJA YEARLY ONCE AT LEAST, FOR THE BENEFITS OF OWN & FAMILY. AS WELL AS FOR THE BENEFITS OF THE WORLD LIVING THINGS.
இந்த பூஜையை சொந்த நலனுக்காகவும், குடும்ப உறுப்பினர்களின் நன்மைகளுக்காகவும் மற்றும் உலக உயிர்களின் நன்மைகளுக்காகவும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒரு முறையாவது இந்த ஹோமத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என பழங்கால யோகிகளும், சித்த பெருமக்களும் அறிவுறுத்துகிறார்கள்.
Homam can be performed at your place by your own hand or in our premises on request.
ஹோமம் உங்கள் இடத்திலோ அல்லது எங்கள் வளாகத்திலோ உங்களின் கோரிக்கையின் பேரில் நடத்தித் தருகிறோம்.
The best days to perform this Homam is Shukla Chaturthi, Astami, Fridays as well as on Birthdays or on the day of Birth star.
இந்த ஹோமம் செய்ய சிறந்த நாட்கள் சுக்ல சதுர்த்தி, அஷ்டமி, வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிறந்த நாள் அல்லது பிறந்த நட்சத்திர நாட்கள். முக்கியமாக கிரஹப்பிரவேசம், புதுமனை புகுவிழா, புதிய தொழில், கடை, தொழிற்ச்சாலை, அலுவலகம் போன்ற அனைத்து நற்காரியங்களுக்கும் ஸ்ரீ வாஞ்ச கல்பலத ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம் செய்து தொடங்க அதி விரைவில் பலன் கிட்டும்.
YOU WILL RECEIVE HOMAM PRASADA WITH INVOKED SRI CHAKRA MADE OUT OF ASHTA GANDHAM IN THE COMPLETION OF THE POOJA WITH THE BLESSINGS OF SRI VANCHA KALPALATA GANAPATHI (PURE COSMIC ENERGIES)
ஸ்ரீ வஞ்ச கல்பலதா கணபதியின் ஆசீர்வாதத்துடன் பூஜையின் நிறைவில் அஷ்ட கந்தத்தால் ஆன ஆவாஹனம் செய்யப்பட்ட ஸ்ரீ சக்ரம் மற்றும் ஹோம பிரசாதத்தைப் பெறுவீர்கள்.
BENEFITS OF VANCHAKALPALATHA GANAPATHI HOMAM / வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமத்தின் பலன்கள்
Fulfills Heart-full desires.
Boost income earnings,
Brings Accumulation & achievements of Wealth and Prosperity.
Unbroken Protection Magical Mantra Shield. Destroys evil eye, evil effects, witchcrafts. And protects against it’s attack.
Bestows good health.
Result oriented career.
It gives success in suitable profession.
Enables the achievement of all objectives.
Gives charming leadership qualities.
Ban on marriage will be removed.
Makes a great life partner.
Boost bondage and relationship
Happy family life.
Increases solid relationships.
Creates closeness and affection in relationships.
Cures infertility & Blessed with children
Remove Rahu, Ketu Dosha.
Remove Malefic effects of Ketu Dasa Dasa bhuktis & brings Good Fortune.
Overcome all obstacles in life,
Prevent negativities.
Understanding life with awareness
Self-consciousness,
Purify Heart and Soul,
Cleanse Sins & Bad Karmas
1. இதயம் நிறைந்த ஆசைகளை (நினைத்ததை) நிறைவேற்றுகிறது.
2. வருமானத்தை அதிகரிக்கிறது,
3. செல்வச் செழிப்பை குவித்து பெரும் சாதனைகளை செய்ய வைக்கிறது.
4. பாதுகாப்பான பெரும் மந்திர கவசத்தை நம்மை சுற்றி உருவாக்குகிறது.
5. நல்ல உடல் ஆரோக்கியத்தை தருகிறது.
6. உகந்த பொருத்தமான தொழிலை அடையாளங்காட்டி அதில் அளப்பரிய வெற்றியைத் தருகின்றது.
7. அனைத்து வாழ்வியல், ஆன்மீக இலக்குகளையும் அடைய உதவுகிறது.
8. வசீகரமான தலைமைப் பண்புகளைக் கொடுக்கிறது.
9. திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கை துணையை தரும்.
10. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை தரும்.
11. உறுதியான அன்பான உறவுகளை அதிகரிக்கிறது.
12. உறவுகளில் நெருக்கத்தையும் பாசத்தையும் உருவாக்குகிறது.
13. மலட்டுத்தன்மையை குணப்படுத்துகிறது மற்றும் குழந்தையின்மையை போக்கி குழந்தை வரம் அருள்கிறது.
14. ராகு, கேது தோஷம் நீங்கும்.
15. ராகு-கேது தசா மற்றும் அனைத்து கிரக தசா புக்திகளின் தீங்கான பலன்களை நீக்கி நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.
16. வாழ்க்கையில் அனைத்து தடைகளையும் தகர்த்து,
எதிர்மறை ஆற்றல்களை தடுக்கிறது.
17. விழிப்புணர்வுடன் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, சுயத்தை உணர வைக்கிறது.
18. இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது,
பாவங்களையும் கெட்ட கர்மங்களையும் அழிக்கிறது. கண் திருஷ்டி, ஏவல், பில்லி சூனியத்தை அழித்து, தாக்காமல் பாதுகாக்கும்.

SRI VAANCHAA KALPALATHAA GANAPTHI
Vancha means Desires, Kalpa means timelessness (no ending & no beginning), Latha means Divine mother Lalithambika one who grants all heart desires.
Vancha Kalpa Latha Ganapathi is the Lalathambika Shakti in Ganapthi form which grants all the heart desires. It is very secret, powerful and rare Sri Vidya Upasana Sadhana.
The mantra of Shri Vaancha Kalpa Ganapathy is a samputa of a Rig vedic hymn, vallabha Mahaa Ganapathy moola mantra, Gayatri Mantra, Durga mantra, mahamritunjaya mantra and Beejaaksharaas of Ucchista ganapathi, Shri Vidya mantra. Thus this is very powerful and combines in itself the obstacle removal calibre of ganapthy, the wish-bestowing and boundless spiritual power of Mahamrityunjaya, Durga & Shri Vidya mantra, and the power of enchantment of the Rig vedic mantra contained in this.
Vancha Kalpalatha Ganapathi is the combined form of Shiva and shakthi, the lower part of the body is goddess form (Lalithambika) and the upper part of the body is the Ganesha form. This mantra is the ultimate step in Sri Vidya sadhana.
Atharveda text explains importance of this mantra as chanting the mantra of vancha kalpa latha ganapthi once is equal to 444 chants of Maha Ganapathi Mantra and Gayatri mantra. And one fire ritual (yagya/ Yagam / Homam) is equal to 444 fire rituals of Maha Ganapathi and Chandi Homam.
Sri Vancha Kalpalatha Ganapathi mantra is very powerful. This mantra contains, Ksapira prasada Ganapthi, Ucchista ganapathi and Sividya Vallabha Ganapathi, Agni, Surya, Lalaithambika, Balatripura sundari, Mahamritunjaya, Kubera, Lakshmi, Vishnu, Rudra, durga shaktis together.
Its very rare to find combinations of all these powerful shakti’s in one mantra.
This sadhana is highly hidden secret of Sri Vidya Tradition (as 8th Level) apart from 7 levels of Sri Vidya Upasana.
ஸ்ரீ வாஞ்சா கல்பலதா கணபதி
வாஞ்ச என்றால் ஆசைகள், கல்பா என்றால் காலமற்ற தன்மை (தொடக்கமும் முடிவும் இல்லாதது), லதா என்றால் தெய்வீக அன்னை லலிதாம்பிகை, கணபதி கணங்களின் அதிபதி. கணம் என்றால் பவித்ரம். பவித்திரங்களின் அதிபதி கணபதி. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவர்.
ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதி என்பது, கணபதி வடிவில் உள்ள லலாதாம்பிகை சக்தி, இது அனைத்து இதய ஆசைகளையும் வழங்குகிறது. இது மிகவும் ரகசியமானது, சக்தி வாய்ந்தது மற்றும் அரிதான ஸ்ரீ வித்யா உபாசனா சாதனா.
ஸ்ரீ வாஞ்ச கல்ப கணபதியின் உபாசன விதி மற்றும் மந்திரம் ரிக் வேதத்திலும், குமார சம்ஹிதையிலும் தெளிவாக உள்ளது.
இந்த மந்திரமானது வல்லப மஹா கணபதி மூல மந்திரம், காயத்ரி மந்திரம், துர்கா மந்திரம், மஹாமிருத்தயுஞ்சய மந்திரம் மற்றும் உச்சிஷ்ட கணபதியின் பீஜாக்ஷரஸ், ஸ்ரீ வித்யா மந்திரம் ஆகியவற்றின் சம்புடமாகும். எனவே இது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மஹாமிருத்யுஞ்சயா, துர்கா மற்றும் ஸ்ரீ வித்யா மந்திரத்தின் எல்லையற்ற ஆன்மீக சக்தியை ஒருங்கிணைக்கிறது.
ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதி என்பது சிவன் மற்றும் சக்தியின் ஒருங்கிணைந்த வடிவமாகவும். உடலின் கீழ் பகுதி தேவி வடிவமாகவும் (லலிதாம்பிகை) உடலின் மேல் பகுதி விநாயகர் வடிவமாகவும் உள்ளது. இந்த உபாசன மந்திரம் ஸ்ரீ வித்யா சாதனாவின் இறுதி படியாகும்.
ஸ்ரீ வாஞ்ச கல்ப லதா கணபதியின் மந்திரத்தை ஒருமுறை உச்சரிப்பது மகா கணபதி மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தின் 444 மந்திரங்களுக்கு சமம் என அதர்வன வேதம் இந்த மந்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதிக்கு செய்யும் ஒரு யாகம் / ஹோமம் என்பது மகா கணபதி மற்றும் சண்டி தேவி ஹோமம் ஆகியவற்றின் 444 யாகங்களுக்கு சமமாகும்.
ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தில், க்ஷபிர பிரசாத கணபதி, உச்சிஷ்ட கணபதி மற்றும் சிவித்யா வல்லப கணபதி, அக்னி, சூரியன், ஸ்ரீ லலிதாம்பிகை, பாலத்ரிபுர சுந்தரி, மஹாமிருதுஞ்சய, குபேர, லக்ஷ்மி, விஷ்ணு, ருத்ரா, துர்கா சக்திகள் உள்ளன.
இப்படி அதிசக்தி வாய்ந்த அனைத்து சக்திகளின் ஒருமித்த சக்தியை ஒரே மந்திரத்தில், ஒரே உபாசனையில் இருப்பதே ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதியின் தனிச் சிறப்பு.
இந்த ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதியின் உபாசன சாதனா ஸ்ரீ வித்யா உபாசனையின் 8 வது படி நிலையாக ஸ்ரீ வித்யா பாரம்பரியத்தின் மிகவும் மறைக்கப்பட்ட ரகசியமாகும்.
PARABRAHMA MAHA SIDDHA GURU
Parabrahma Maha Siddha Guru (to qualify) in Sri Vidya tradition
To receive Sri Vanja Kalpalatha Ganapati Upasana Deeksha, one must have done Sri Vidya Upasana for 11.5 years to get Deeksha.
It may take 1 to 12 years to attain mantra siddhi after receiving mantra deeksha of Shri Vanja Kalpalatha Ganapati.
A person who has attained this mantra siddhi has to perform Sri Vanja Kalpalada Ganapathi Yagam / Homam in 444 navamis continuously and must complete the daily upasana rituals for 222 months, 18.5 years i.e. 6660 days, to attains the status of *Parabrahma Maha Siddha Guru*.
There are thousands of Siddha gurus in this universe. But why only 18 siddhas have been honored, because they were completed this sadhana in the name of Annai Valai Thai Poosai.
And the reason Kriya Babaji is called Mahavathar is that he is the only one who has completed this Upasana Sadhana without any break in between.
One more soul in this tradition Parabrahma Maha Siddha Guru Managurunathan completed this complex highest secret Upasana Sadhana on 31-Dec-2022 by the grace of Siddha Gurus.
பரப்ரஹ்ம மஹா சித்த குரு
ஸ்ரீ வித்யா பாரம்பரியத்தில் *பரப்பிரம்ம மகா சித்த குரு* (தகுதி பெற)
ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதி உபாசனை தீட்க்ஷை பெற 11.5 வருடம் தொடர்ந்து பூரண ஸ்ரீ வித்யா உபாசனை செய்திருக்க வேண்டும். அதன் பிறகே இந்த மந்திர தீக்ஷை கிடைக்கும்.
ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதியின் மந்திர தீக்ஷை பெற்ற பிறகு மந்திர சித்தி அடைய 1 முதல் 12 வருடங்கள் ஆகலாம்.
இந்த மந்திர சித்தி பெற்ற ஒருவர் தொடர்ந்து 444 நவமிகளில் ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதி யாகம் செய்து, 222 மாதங்கள், 18.5 வருடங்கள், அதாவது 6660 நாட்கள் தினசரி உபாசனை சடங்குகளை தவறாமல் செய்து முடிக்கிறாரோ அவர் *பரபிரம்ம மகா சித்த குரு* நிலையை பெறுகிறார்.
இந்த பிரபஞ்சத்தில் ஆயிரக்கணக்கான சித்த குருக்கள் உள்ளனர். ஆனால் 18 சித்தர்களுக்கு மட்டும் ஏன் இந்த பெருமை எனில், அவர்கள் அன்னை வாலை தாய் பூசை என்ற பெயரில் இந்தச் சாதனையை செய்து முடித்தவர்கள்.
மேலும் கிரியா பாபாஜியை மஹாவதார் என அழைப்பதின் காரணம் என்னவென்றால் இடையிடையே தடங்கல்கள் இன்றி இந்த உபாசனையை மேற்கொண்டு வெற்றிபெற்றவர் அவர் ஒருவரே.
இந்த பாரம்பரியத்தில் மேலும் ஒரு ஆன்மா பரப்பிரம்ம மகா சித்த குரு மனகுருநாதன் அவர்கள் சித்த குருமார்களின் பேரருளால் 31-டிசம்பர்-2022 அன்று இந்த சிக்கலான மிக உயர்ந்த ரகசிய உபாசன சாதனாவை நிறைவு செய்தார்.



SIGNIFICANCE OF SRI VANCHA KALPALATHA GANAPATHI
Vancha Kalpalatha Ganapati is the deity who bestows all our desires. This form is a very powerful combination of the cosmic liveliness of “Kalpa and Lalithaambika” energy. Here, ‘Kalpa’ denotes ‘a relatively longer period of Time.’ ‘Latha’ signifies “Goddess Lalithaambika. In essence, it means that Vancha Kalpalatha Ganapati is One who remains in the hearts of devotees for a “longer period of time” and who has no end and no beginning. It is a form of Lord Shiva and Goddess Shakti. The lower part of the body is Goddess Lalithaambika, and the upper part of the body is Lord Ganesha.
ஸ்ரீ வாஞ்ச கல்பலதா கணபதியின் முக்கியத்துவம்
வாஞ்ச கல்பலத கணபதி நம் விருப்பங்களை எல்லாம் அருளும் தெய்வம். இந்த வடிவம் “கல்ப மற்றும் லலிதாம்பிகை” ஆற்றலின் அண்ட உயிரோட்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த கலவையாகும். இங்கே, ‘கல்ப’ என்பது ‘ஒப்பீட்டளவில் நீண்ட காலத்தை’ குறிக்கிறது. ‘லதா’ என்பது “லலிதாம்பிகை தேவியைக் குறிக்கிறது. சாராம்சத்தில், வாஞ்ச கல்பலதா கணபதி என்பது பக்தர்களின் இதயங்களில் “நீண்ட காலத்திற்கு” நிலைத்திருப்பவர் என்று அர்த்தம். முடிவும் ஆரம்பமும் இல்லாதவர். இது சிவபெருமான் மற்றும் சக்தி தேவியின் ஒருமித்த வடிவம். உடலின் கீழ் பகுதி லலிதாம்பிகை தேவி, உடலின் மேல் பகுதி விநாயகர்.
WHY IS GODDESS LALITHAAMBIKA SHAKTI WITH LORD GANESHA?
Vancha Kalpalatha Ganapati is a very rare Srividya Roopini. Her Sadhana as Lalithaambika is said to be extraordinary. In popular terms, Lalithaambika Shakti is called ‘Parabrahma’, the Ultimate Guru of Consciousness. She is the Divine Mother, Lalithaambika, who is the master of all Siddhas, Yogis, and Rishis.
She is also the guiding master to the principle of “Oneness”, meaning the oneness of Lord Shiva and Goddess Shakti. Devotees invoke Vancha Kalpalatha Ganapati to destroy enemies, evil spirits, and demonic forces, as well as to remove obstacles to achieving goodness, purity, peace, and harmony. She helps restore dharma.
விநாயகப் பெருமானுடன் லலிதாம்பிகா சக்தி இருப்பது ஏன்?
வாஞ்ச கல்பலதா கணபதி மிகவும் அரிதான ஸ்ரீவித்யா ரூபிணி. லலிதாம்பிகையாக அவரது உபாசன சாதனா அசாதாரணமானது என்று கூறப்படுகிறது. பிரபலமான சொற்களில், ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி ‘பரப்பிரம்ம’ என்று அழைக்கப்படுகிறார், நனவின் இறுதி குரு. அவள் தெய்வீக அன்னை, லலிதாம்பிகை, அவள் சித்தர்கள், யோகிகள் மற்றும் ரிஷிகள் அனைவருக்கும் மகாராணி.
சிவன் மற்றும் சக்தி தேவியின் ஒற்றுமையைக் குறிக்கும் “ஒருமை” என்ற கொள்கைக்கு அவள் வழிகாட்டும் குரு. எதிரிகள், தீய சக்திகள் மற்றும் அசுர சக்திகளை அழிக்கவும், நன்மை, தூய்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கான தடைகளை நீக்கவும் பக்தர்கள் வாஞ்ச கல்பலதா கணபதியை அழைக்கிறார்கள். அவள் தர்மத்தை மீட்டெடுக்க உதவுகிறாள்.
சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள். – சமித்து குச்சிகளும் பலன்களும்
மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது. செல்வம் சேரும், ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது. துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
மாமர சமித்து : சர்வ மங்களங்களையும் சித்திக்கும்.
ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும். ஆலங் குச்சி புகழைச் சேர்க்கும்.
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
வெள்ளை எருக்கு: சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்ட சித்துகளையும் அடையலாம். இச்சமித்துகளால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
நாயுருவி சமித்து: புதனுக்குப் பிடித்தது . இதனால் லட்சுமி சுடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது. அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை, அரசாங்க நன்மை கிடைக்கும்.
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது, மக்கட்பேறு, பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னிமர சமித்து: சனீஸ்வரனுக்குப் பிடித்தது, கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்….இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகு பிடித்தது. விஷபயம் நீங்கும்.பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும்.
தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி, சூனியம் அகலும்
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
நொச்சி : காரியத்தடை விலகும்.
சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
கொடிக்கள்ளி எனப்படும் சோமவல்லிக் கொடியின் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.
நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி.
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது.
மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
மாதுளை : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
திரவியங்கள்:
1.விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம்
2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி
3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம்
4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி
5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம்
6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி
7. பூசணிக்காய் – சத்ருநாசம்
8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி
9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி
10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி
11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்)
12. நெல் பொரி – பயம் நீக்குதல்
13. சந்தனம் – ஞானானந்தகரம்
14. மஞ்சள் – வசீகரணம்
15. பசும்பால் – ஆயுள் விருத்தி
16. பசுந்தயிர் – புத்ர விருத்தி
17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி
18. நெய் – தனலாபம்
19. தேங்காய் – பதவி உயர்வு
20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி
21. அன்னம், பட்சணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம்
22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம்
23. சௌபாக்ய திரவியங்கள்: பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.
- What Is the Śrī Cakra? The Nine Āvaraṇas Explained
- Sri Vidya Upasana: A Complete Guide to Sri Chakra, Navavarana, Mantra and Krama
- Sri Rajarajeswari Mantra Matruka Stavam
- Protected: IP – SRI CHAKRA NAVA AVARANA PUJA KRAMA (Simplified)
- Secrets of Ganapati: Tantric Anatomy
Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST
Subscribe to get the latest posts sent to your email.
