Sri Chakra Puja: The Tantric Path

Sri Chakra Worship: Complete Traditional Method & Authentic Guide

Sri Lalitha Tripura Sundari/ ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி

Spiritual and practical significance

தேவியின் அருளைப் பெற
[இதை தினமும் பத்து முறை ஜபிக்கவும்]

Mantra

பதயா வா படலே, ஸ்தாபய வா சகலா புவன சம்சயே, மாதா தவ பாத யுகளம், முஞ்சமி நைவ முஞ்சமி

पथया वा पटले, स्थापया वा सकला भुवना समस्ये, माथा थाव पद युगलम्, मुछामि नैवा मुछामि।

Pathaya Vaa Patale, Sthapaya Vaa Sakala Bhuvana Samraye, Matha Thava Pada Yugalam, Munchami Naiva Munchami

விளக்கம்

என்னைக் கீழ்நிலைக்கு தள்ளுங்கள் அல்லது பிரபஞ்சத்தின் அரசராகச் சுமந்தாலும் தாக்கமில்லை — ஓ அம்மா, உங்கள் பாதங்களை நான் ஒருபோதும் விட்டு செல்லமாட்டேன்.

To Get the Grace of Goddess
[Chant this ten times daily]

Meaning:Push me in to Patala (Underworld) or establish me as the king of the universe,
Oh Mother, I would not leave your feet, will not leave.

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!
யந்திர ராஜாய வித்மஹே
மகா யந்திராய தீமஹி
தன்னோ யந்திர ப்ரசோதயாத் – என்றும்
மந்திர ராஜாய வித்மஹே
மகா மந்திராய தீமஹி
தன்னோ மந்திர ப்ரசோதயாத் – என்றும்
யந்திரங்களில் எல்லா யந்திரங்களுக்கும் தலையாயது ஸ்ரீ சக்ர யந்திரம், எனவே யந்திர ராஜம் எனப்பெயர். அதுபோல நமது சமய வழிபாடுகளில் அனைத்து மந்திரங்களுக்கும் ஸ்ரீ வித்யா மந்திரமே தலையாயது என்பதால் மந்திர ராஜம் எனும் இவ்வழிபாடு சிறப்பு பெறுகிறது.

Sri Chakra which gives all benefits!
Yantra Rajaya Vidmahe
Maha Yantraya Thimahi
Tanno yantra prasodayat
Mantra Rajaya Vidmahe
Maha Mantraya Thimahi
Thanno mantra prasodayat
Among the Yantras, the head of all the Yantras is Sri Chakra Yantra, hence the name Yantra Raja. Similarly, Sri Vidya Mantra is the head of all mantras in our religious worship, so this worship is called Mantra Raja.

அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம்
த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்
அணிமாதிபி ராவ் ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவானீம்
மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
சர்வபூத ஹிதே மாத:
ஏகி யேகி பரமேஸ்வரி
ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம்
சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம்
யந்திர ஸ்தானே ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே!…

Arunaam Karunaa Tarangitaakshim
Trutha Paasaankusha Pushpapana Saabam
Animaathibhi Rao Rudhaam Mayugai:
Ahamityeva Vibhaavaye Bhavaaneem
Mahaapadma Vanaandhashthe Dhaarana Nanda Vikrane
Sarvabhuta Hidhee Maatha:
Eki Yeki Parameshwari
Sri Lalitha Mahaa Tripura Sundarim
Saubhaagya Lakshmi Swaroopineem
Yantra Sthaanae Aavaakayami Swagadam Darsayaami.
Samastha Chakra Chakresi Yudhe Devi Navaadmike Aarathtika Mitham Dubyam Gruhaana Mama Siddhaye!…

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

Om Namo Bhagwati Sarva Mangaladhaayini
Sarva yantra Swarupini Sarvamantra Swarupini
Sarvaloka Jananee Sarvaabeeshta Pradaayini
Maha Tripurasundari Mahaadevi
Sarvaabhishta Shaadaya Shaadaya Aapatho Naasaya Naasaya
Sampado praabhaya prabhaya Shahag Kutumbam vardaya vardaya
Ashta Aishwarya Siddhim Kuru Kuru
Bhaahimaam Sridevi Dubyam Namaha
Bhaahimam Sridevi Dubyam Namaha
Bhaahimam Sridevi Dubyam Namaha…

ஜகத் ஜனனி, ஆதிசக்தி, பரமேஸ்வரி வாசம் செய்யும் அம்ருத ஸாகரமானாலும் சரி, மேரு சிகரமானாலும் சரி, அங்கே சிந்தமணி க்ருஹம் என்ற அரண்மனையிலே காமேஷ்வரியாக காமேஸ்வரனுடன் ஸ்ரீ சக்கரமாகவே இருக்கிறாள். அம்மை அப்பனின் ஒருமித்த ரூபமே ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரமே அம்மையப்பன்.

Jagat Janani, Adishakti, Parameshwari either resides in the Amruta Sagar or Meru hill and there in the palace called Sindamani Gruham as Kameshwari with Kameswaran as Sri Chakra. Sri Chakra is the unanimous image of Ammai Appan. Sri Chakra is Ammayyappan.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானின் சிவ சக்கரமும், சக்தி சக்கரமும் இணைந்த ஸ்ரீ சக்கரமே சிதம்பர ரகசியம் ஆகும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமான் 14 தடவை தனது டமருகத்தை அடித்து ஒலி எழுப்பினார் . முதலில் ஒன்பது தடவையும் பின்னர் ஐந்து தடவையும் மங்கள ஒலி எழுப்பினார். ஒன்பது என்பது தேவிக்குரிய நவாக்ஷாரி.
ஐந்து என்பது சிவனுக்குரிய பஞ்சாட்சரம். மேலும் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அன்னைக்குரிய இடது காலால் நடராஜர் அருள் பாலிக்கிறார். சக்திக்குரிய நவாக்ஷரி மந்திரத்தை முன்னிலைப்படுத்திய நடராஜர், அருள் பாலிப்பது சக்தியின் மூலமே என்பதைப் போல இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடி அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ சக்கரம் என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹாசாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் சதாசிவன், மகா விஷ்ணு. பிரம்மா, கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களும் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாட்ட அளப்பரிய பலன் உண்டு. ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நூல்கள் பல. நமக்கு நன்கு பரிச்சயமான ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவைகள் சில மட்டுமே.

The secret of Chidambaram is the Sri Chakra, which is the combination of Lord Nataraja’s Shiva Chakra and Shakti Chakra seated in Ponnambalam. Nataraja residing in Chidambaram Ponnambalam struck his drum 14 times and made a sound. First he chanted nine times and then five times. Nine is Navakshari of Goddess.
Five is Shiva’s Panchatcharam. And Nataraja graces with the left leg of the mother who is residing on his left side. Highlighting the powerful Navakshari mantra, Nataraja dances blissfully raising his left leg as if grace is the source of power.
Sri Chakra Mahameru is the nine-tiered palace of Shiva Shakti. Greatest Kingdom of Sri Lalita Maha Tripurasundari. All the deities from Ganapati, Murugan to Kali and Bhairava have a place in this realm. All deities can be worshiped at one place while worshiping Sri Chakra. We can understand the importance of Sri Chakra & Navakshari from Sri Lalitha Sahasranamam, Soundaryalahari, Devi Mahatmiyam, Navarathanamalai, Abhirami Anthadi etc. are the glories of Goddess Sri Lalitha Maha Tripurasundari seated on the Sri Chakra.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கரர் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், ஸத்யலோஹம் எனும் மேல்லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மகாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார். ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.
ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

In the second song of Soundaryalahari, when Adi Shankara speaks, Brahma created the upper worlds like Bhuloka, Puvarloka, Suvarloka, Maharloka, Janaloka, Tabaloka, Satyaloham, and the lower worlds of Atala, Vidala, Sudala, Rasatala, Talatala, Mahatala, Patalam, using the particles of soil that fall from the Holy feet of Sri Shakti. Adisashan is formed by the soil dust of Sri Mahadevi’s feet and supports the fourteen worlds created by Brahma with his head.
Sri Rudra took the foot soil powder of the goddess, and powdered Bhasma and applied it from his head to his feet using with the “Triambaga” mantra.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.
தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீகணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .
ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

Saraswati, the power of Brahman, and Lakshmi, the power of Vishnu, are standing on either side of Sri Lalita Maha Tripurasundari, throwing hammers and performing duties.
Sri Ganapati appeared with Vallabai Siddhi Lakshmi when Devi addressed Shiva with love. Sri Ganapati and Sri Murugan are children drinking milk from their mother in Sri Chakra.
On the right side of the chamber where the Sri Chakra is situated, Mahakali and on the left Maha Bhairav are guarding the Mother as dwara shaktis.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்யதாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரம்.

Navagrahas, 27 Nakshatras, 12 Zodiacs, are crawling Mother. Thus, Sri Lalitha Maha Tripurasundari, who presides over all the deities, is blessed by the great sovereign mother Sri Lalitha.

ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வழிபட்ட முழு பலன்கள் கிடைக்கும். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு அஷ்ட கந்தத்தாலான ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.


ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.


அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் போன்று எங்கும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் ஒற்றுமையும், அமைதியும், சகல செல்வங்களும் முக்கியமாக ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பும் ஏற்படும். ஸ்ரீ சக்ர வழிபாட்டிற்கு நூற்றியெட்டு மந்திரங்கள் அடங்கிய அஷ்டோத்திரமும், நூற்றியென்பது மந்திரங்கள் கொண்ட கட்கமாலா ஸ்தோத்திரமும், முன்னூறு மந்திரங்கள் கொண்ட லலிதா திரிசதியும், ஆயிரம் நாமாவளிகள் கொண்ட லலிதா சஹஸ்ரநாமமும், இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகிய பஞ்ச தசாக்ஷ்ரி, லகு ஷோடசி, ஷோடசி, மகா ஷோடசி, சர்வ சௌபாக்ய சிவ சோடசி, பர ஷோடஸீ, மஹா மஹா ஷோடஸீ போன்ற ஸ்ரீ வித்யா மூலமந்திரங்களும் குரு முகமாக அறிந்து உபதேசம் பெற்றுக்கொள்வது சாலச்சிறந்தது. தமிழில் திருமந்திரம் மற்றும் அபிராமி அந்தாதி ஆகியவற்றில் ஸ்ரீ வித்தை பற்றியும், ஸ்ரீ சக்ரம் பற்றியும் தெளிவான குறிப்புகள் உள்ளன.

ஸ்ரீ நாகராஜ் பாபா சித்தாஸ்ரம்

ஸ்ரீ சக்ர வழிபாட்டிற்கு குரு உபதேசமும், ஸ்ரீ வித்யா மூலமந்திர உபதேசமும் அவசியம் தேவை (லகு ஷோடசி, பஞ்ச தக்ஷாக்சரி, ஷோடசி, மகா ஷோடசி, சர்வ சௌபாக்ய சிவ ஷோடசி, பர ஷோடஸீ, மஹா மஹா ஷோடஸீ). முறையாக அவற்றைப் பெற்று வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும். வாசனை மிகுந்த மலர்களால் மட்டுமே ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிக்க வேண்டும்.


புராணங்கள் கூறும் ஸ்ரீ சக்ர வழிபாட்டு மகிமைகள்

ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. எதிரிகள் தொல்லை போன்றவைகளுக்கு வாய்ப்புகளே இல்லை. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை வேலை செய்யாது கட்டுப்படும். ஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு எந்த விதமான ஜாதக, கிரக தோசங்களும் பாதிக்காது.

கோடிக்கணக்கான ஆலயங்களில் பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, ஒரு முறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.

பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் ஸ்ரீ சக்கரத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பூஜித்து எல்லா பௌதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை (முக்தி/ மறுபிறவி சுழற்சி விடுதலை) அடைய முடியும்.

பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் ஸ்ரீ சக்கரத்தை விதிமுறைப்படி ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை! இவற்றை எல்லாம் உயர்வானது ஸ்ரீ சக்கர தரிசனம் அல்லது ஸ்ரீ சக்கர பூஜை.

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும் கூட, ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!

வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலி. அவனைவிட அதிர்ஷ்டசாலி ஸ்ரீ சக்கரத்தை முறையாக தர்சனம் செய்பவனே. அப்படிவனையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் ஸ்ரீ வித்யா தந்திரம் எனும் வாலை பரமேஸ்வரியை, முறையாக ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

இரசசமுச்சயம் என்ற நூலில், ஸ்ரீ சக்கரத்தை தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்த உபாயமுமில்லை. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது.

இந்த ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வாலை தாயின் ஸ்ரீ சக்கர உபாசனை தீக்ஷை புண்ணியம் செய்தவர்களுக்கும், ஆசை இல்லாதவர்களுக்கும், இதுவே கடைசி பிறவியாக பிறந்தவர்களுக்கும், மறுபிறவி இன்றி பிறப்பு இறப்பு சுழற்சியில் விடுதலை பெற்று பிறவாமை வேண்டுபவர்களுக்கும், தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்க முடியும். இதை பேராசைகாரர்கள் அடைய நினைத்தால் அழிவு உண்டாகும். தற்போது கடைகளிலும், சில ஆன்மீக மடங்களிலும் யந்திரங்கள் முறைப்படி சுத்தி செய்யப்படாத சாபநிவர்த்தி செய்யப்படாதவைகளே கிடைக்கின்றன. மேலும் தவறான கோணங்களை கொண்ட ஸ்ரீ சக்கரங்களேயாகும். அவற்றை வாங்கி பூஜிப்பதால் எந்த பலனும் இல்லை. அச்சடிக்கப்பட்ட யந்திரத்தை உபயோகிக்க பயனில்லை. அச்சடிக்கப்பட்ட யந்திரத்தை தியானம் (தாரணை) செய்ய உபயோகிக்கலாம்.

ஸ்ரீ சக்கரம் பெறும் முறைகள்: தங்களுக்காக தாங்களே முறையாக கற்று ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கி வழிபடலாம்.

தங்களின் குருமார்கள் பூஜித்த ஸ்ரீ சக்கரத்தை அவர் இறந்த பிறகு பெற்று பூஜிக்கலாம்.

தங்களுக்குக்காக குருமார்களால் உருவாக்கி தரும் ஸ்ரீ யந்திரத்தை பூஜிக்கலாம்.

இதைத்தவிர வேறெந்த முறையிலும் வாங்கி உபயோகிப்பதால் பலனில்லை என்கிறார்கள் நமது சித்த பெருமக்கள்.

ஏனெனில் ஸ்ரீ சக்கரம் வரையும் போது பல நடைமுறை விதிமுறைகள் உள்ளன, ஸ்ரீ சக்கரத்தில் பல்வேறு கணக்கீட்டு நுட்பங்களும் இருக்கிறது.

உதாரணமாக, தங்களுக்கு தாங்களே முறையாக கற்று ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கினாலும் சரி அல்லது தங்களின் குருமார்கள் உருவாக்கினாலும் சரி பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் படி தங்களின் பட்சியானது ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே உருவாக்கப்பட்ட யந்திரங்களே பூஜிக்க உகந்ததாக இருக்கும். முழுமையான பலன்களும் கிடைக்கும். மேலும் தங்கத்தால் ஆன எழுத்தாணி அல்லது முள்ளம் பன்றியின் முட்களை கொண்டு வரைய வேண்டும். இயலாத பட்சத்தில் நவலோகம், அஷ்டலோகம், பஞ்சலோகம் உபயோகிக்கலாம். இதுபோன்ற பல விதிமுறைகள் உண்டு. மிக முக்கியமாக ஸ்ரீ சக்கரத்தின் முக்கோண அமைப்புக்கள் தங்க விகிதத்தில் (The Golden Ratio) அமைக்கப்பட வேண்டும். அவற்றை முறையாக அனுசரித்து விரதமிருந்து, ஏற்கனவே சித்தி செய்த மந்திரத்தை உச்சாடனம் செய்து ஸ்ரீ சக்கர யந்திரத்தை உருவாக்க வேண்டும்.

அனைத்து ஆன்மீக அன்பு உறவுகளும் தங்களுக்கான யந்திரத்தை தாங்களே உருவாக்கி பூஜித்து அனைத்து பலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.


அர்ச்சனை மலர்களும் பலன்களும்

வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம். 48 நாட்கள் விரதமிருந்து இவ்வழிபாட்டினை நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.

ஸ்ரீ சக்ரத்திற்கு துளசியாலும், தாமரையிதழ்களாலும் அர்ச்சனை செய்து, 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும்.

அதேபோல், சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.

மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும்.

ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும்.

அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் (திதி நித்யா பூஜை), தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர்.

நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.

ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை (ஸ்ரீ தாரா தேவி) மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம்.

ஸ்ரீ தாரா தேவி

பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.

ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது, கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.

The Brahmanda Purana says that to increase wealth in business and life, to make the enemy’s intrigues and obstacles to invade your shop and office, to make the customers invade your shop and office, you should prepare Ashta Gandha Sri Chakra and worship it. A Yantra image can be clearly drawn and worshiped on any plate made of copper, silver or panchaloka. It gives only moderate results.

After preparing the offerings according to the usual method, the place of worship should be cleaned thoroughly and the yantra should be placed on a pedestal in the golam area. Then start the mantra pooja by lighting pancha incense lamp. It is better to use chevvarali flower for mantra consecration.

தொழில், வியாபாரத்தில் செல்வம் பெருக, வியாபாரம் விருத்தியடைய எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வாடிக்கையாளர்கள் உங்களது கடையை, அலுவலகத்த நோக்கிப் படையெடுக்கச் செய்ய அஷ்ட கந்தத்திலான ஸ்ரீ சக்கரத்தை தயார் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும் என்கிறது பிரமாண்ட புராணம். செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் ஆன ஏதாவது ஒரு தகட்டிலும் யந்திர உருவத்தைத் தெளிவாக வரைந்து வழிபடலாம். இது மத்திம பலனை மட்டுமே தரும்.

வழக்கமான முறைப்படி நிவேதனப் பொருள்களை தயார் செய்து பூஜை செய்யும் இடம் நன்கு சுத்தம் செய்து, கோலமிட்ட இடத்தில் ஒரு பீடத்தின் மீது யந்திரத்தை வைக்க வேண்டும். பிறகு பஞ்ச தூபம் தீபம் காண்பித்து மந்த்ர பூஜையைத் தொடங்க வேண்டும். மந்திர அர்ச்சனை செய்வதற்கு செவ்வரளிப் பூவைப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி

Worshiping Asta Gandha Sri Chakra or Sri Yantra (made using 8 divine herps) with Sri Vidya Sudarshan Maha Mantra is beneficial for good health, protection in all spheres and for relief from various diseases and ailments. This divine yantra is also beneficial for protecting the spiritual aspirant from all negative forces that may be disturbing their lives and their Dharma practice.

Sri Vidya Sudarshan Maha Mantra can also be used as a type of exorcism which removes elementals and other troublesome astral entities.

And Vanquish your enemies and protects you from harmful things, negative chants, evil eye etc.

Worshiping Asta Gandha Sri Chakra has the attribute of giving immediate relief from the pain and also provides relief to the seeker who is suffering. It also has the attribute of Paap Nashanam (the destruction of sins).

*Benefits of Worshiping Asta Gandha Sri Chakra or Sri Yantra (made using 8 divine herps) with Sri Vidya Sudarshan Maha Mantra*
– Protection of all kinds from malefic effects of all planets and especially brings victory in legal matters.
– Provides immense peace of mind.
– Helps in spiritual augmentation and grants moksha / salvation.
– Makes the devotee invincible. Gives all power to live like a king and help everyone.
– Provides immense wealth, prosperity and abundance to the devotee.
– Provides siddhis and spiritual powers.
– For the sadhana / meditation of Lord Vishnu.
– Remove all kinds of evils, Curses, Ghosts, Black Magic, negativity, illness and misfortune and provide protection at all dimensions.
– Provide mental and physical strength.

*Spiritual Benefits of Sri Vidya Sudarshan Maha Mantra in Sri Chakra*
– For divine blessings of Lord Vishnu.
– For removal of planetary doshas in horoscope.
– It destroys sins & past karma by Antahkarna Shuddhi.
– Promotes spiritual growth.
– It is the most powerful Yantra for dhyaan / meditation and spiritual attainments.

*Health Benefits of Worshiping Asta Gandha Sri Chakra or Sri Yantra (made using 8 divine herps) with Sri Vidya Sudarshan Maha Mantra*
– Prevents mental & physical diseases.
– Boosts immunity & bestows longevity.
– This Yantra Protects from ailments & improves health.
– Worshipers keep Sri Chakra / Sri Yantra for good health and prosperity.
– For freedom from diseases.
– Worshippers get relief from diseases, difficulties and dangers.

வாருங்கள் நாமும் ஸ்ரீ வித்யா எனும் வாலை தாயின் உபாசனை தந்திரம் பெற்று ஸ்ரீ சக்கர பூஜை செய்து பல வெற்றிகளை பெற்று வாழ்க்கை தரத்தையும் பொருளாதார தரத்தையும் பிறவாமை / முக்தி / ஆத்ம விடுதலை ஒருசேரப் பெறுவோம்.

இது மிகவும் கடினமானது என்று நீங்கள் உணர்ந்தால்…

இந்த பயணத்தில் எங்கள் உதவியை நீங்கள் விரும்பினால்… 

நீங்கள் ஒரு எளிய படிப்படியான அணுகுமுறையை பின்பற்ற விரும்பினால்… உங்களுக்கு குறுக்குவழி மற்றும் வழிகாட்டப்பட்ட அணுகுமுறை தேவையெனில்…

நீங்கள் ஸ்ரீ வித்யா ஸ்ரீ பீடத்தின் ஸ்ரீ பாலா சித்தாஷ்ரமத்தின் பயிற்சிகளில் சேர பரிந்துரைக்கிறேன். இது சரியான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது மற்றும் உங்களுக்காக முடிந்தவரை வாழ்க்கையை எளிதாக்குகிறது. மேலும் நமது ஸ்ரீ பாலா சித்தாஷ்ரமத்தின் சித்த குரு மகான்களால் மறைக்கப்பட்ட சக்திவாய்ந்த பல வித்தைகளை தியான முறைகளை பயிற்றுவித்து பயிற்சி அளிக்கிறது.

பூர்ண ஸ்ரீ வித்யாரண்யர்
பரப்ரஹ்ம மஹா சித்த குரு
முனைவர் மனகுருநாதன்

ஸ்ரீ வித்யா ஸ்ரீ பீடம்
உயிர் சக்தி கலைக்கூடம்
ஸ்ரீ பாலா சித்தாஷ்ரம்
பேரண்ட பிரபஞ்ச ஆன்மீக அறிவியல்

SRI VIDYA SRI PEEDAM
LIFE FORCE ACADEMY
SRI BALA SIDDHASHRAM
TEACHINGS OF COSMIC SPIRITUAL SCIENCE


Mobile: 9791476947

WhatsApp: https://chat.whatsapp.com/Jml3nFyGhHBG9jb3SHmcj6

Telegram: https://t.me/sripeedam

Website: https://sribabasiddhashramasabai.wordpress.com

Email:
managurunathan@gmail.com
srividyasripeedam@gmail.com

YouTube:
https://youtube.com/@srividyasripeedam?si=Mcku0SfTmV3yP0bR

https://youtube.com/@TANTRA-KRIYA?si=IoamYxhSrsVi9wP4

Facebook: https://www.facebook.com/profile.php?id=100073256305806&mibextid=ZbWKwL
https://www.facebook.com/sri.vidya.sri.peedam?mibextid=ZbWKwL

Instagram: https://www.instagram.com/managurunathan5?igsh=MXR5dmZncXh4NzAw

LinkedIn:

If you find this too difficulty …

If you would like our help on this spritual journey…

If you want to follow a simple step-by-step approach…

If you need a shortcut and a guided approach…

I suggest you join with Us SRI VIDYA SRI PEEDAM’s SRI BALA SIDDHASRAM. It was created exactly for this purpose and makes it as easy as possible for you. Also in our SRI BALA SIDDHASRAM teaches and practices powerful techniques hidden by the Siddha tradition (including Tantra & Tantric methods).

For more information and counseling, to learn different types of Meditation &  Tantric techniques contact SRI BALA SIDDHASRAM – 9791476947

மேலும் தகவல்கள் மற்றும் ஆலோசனை சிகிச்சை,  பலதரப்பட்ட தியான வகைகள் & தந்திர தாந்த்ரீக வித்தைகளை கற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ பாலா சித்தாஷ்ரம் தொடர்பு கொள்ளுங்கள். 9791476947


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

1 thought on “Sri Chakra Puja: The Tantric Path”

  1. Pingback: Sacred Events & The Divine Shop – SRI VIDYA SRI PEEDAM TRUST

Leave a Reply

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top

    Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading