ஸ்ரீ லக்ஷ்மி குபேர உபாசனை தீட்க்ஷை / SRI LAKSHMI KUBERA UPASANA DEEKSHA

screenshot 20241005 203525 chrome

Atonement and deity worship are the tricks we use to escape the effects of Karma, just as we escape the effects of Karma with a few lines in our law book.

Manduga Tantra Sutrani

ஸ்ரீ லக்ஷ்மி குபேர ரகசியம்

தெய்வ பூஜைகள் என்பது வேறு. உபாசனை என்பது வேறு. பூஜைகள் நாம் சுற்றுலா செல்வது போல. உபாசனை என்பது நாம் வாழும் இடம் போன்றது. தீக்ஷைகள் என்பது நாம் வாழும் இடத்தில் நமக்கான இடத்தைப் பத்திர பதிவு செய்வது போல. பயன்கள் பயன்பாடுகளின் வேறுபாடுகள் மிக அதிகம்.

இந்த பதிவில் ஸ்ரீ லக்ஷ்மி குபேர உபாசனை தீக்ஷை விளக்கம் மற்றும் முறைகள், தேவைப்படும் பொருட்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இப்பதிவு தாங்கள் தங்களை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டியும் தேவையான அடிப்படை பொருட்கள் முன்னேற்பாடாக வாங்கி தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டியும் பதிவிடப்பட்டது. உபாசனை மந்திரம் மற்றும் சில மூலிகைகள் பற்றிய குறிப்புகள் தீக்ஷை உபாசனை அன்று வழங்கப்படும்.

Deity worships are different.  Worship is different.  Pujas are like going on a trip.  Upasana is like the place where we live.  Deekshas are like registering our place where we live.  Uses The differences in uses are enormous.

This post explains Sri Lakshmi Kubera Upasana Deeksha explanation and methods, materials required.  This post is posted so that you should prepare yourself and buy the necessary basic materials in advance and keep them ready.  Notes on upasana mantra and some herbs will be given on deeksha upasana.

Everything Will be fine

Om Siddha jyothi Om

SRI BALA SIDDHARSHRAM

screenshot 20211029 002212853257228426412547

வருடத்தில் ஒருசில மாதங்களில் ஒருசில நாட்களில் மட்டுமே ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் உபாசனை தீக்ஷையினை உபதேசித்து வருகிறோம். முக்கியமாக தீபாவளி அன்று இந்த பூஜையை வடநாட்டவர் (சேட்டுகள்) தவறாமல் செய்வது வழக்கம். இந்த உபாசனை பூஜையை தீபாவளி அன்று செய்பவர்களுக்கு கை மேல் பலன் என்பது உறுதி என பல புராணங்கள் கூறுகின்றன. பூஜையின் பெருமையை முக்கியத்துவத்தை பிரமாண்ட புராணமும் சிவபுராணம் மற்றும் பைரவ சூத்திரமும் தெளிவாக விவரிக்கிறது.

We preach Sri Lakshmi Kuberar Upasana Deeksha only for a few days in a few months of the year.  Mainly on Diwali, this puja is regularly performed by northerners (Chets).  Many Puranas say that those who perform this Upasana Pooja on Diwali are sure to reap the benefits.  Pramanda Purana and Shiva Purana and Bhairava Sutra clearly describe the glory and importance of Puja.

செல்வச் செழிப்பு என்பது பணம் புகழ் மட்டுமல்ல. பதினாறு செல்வங்களை நமது முன்னோர்கள் பட்டியலிட்டுள்ளனர். பல நன்மைகளும்  அனைத்துச் செல்வங்களும் கிடைக்கப் பெறும் பொருட்டு நமது ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம சபை ஸ்ரீ லக்ஷ்மி குபேர தந்திரம் எனும் தாந்த்ரீக வித்தையை உபாசனை தீக்ஷையாக வழங்கி வருகிறது.

Prosperity is not just about money and fame.  Our forefathers have enumerated sixteen wealth.  Our Sri Baba Siddashrama Sabha is offering the Sri Lakshmi Kubera Tantra tantric trick as upasana deeksha to get many benefits and all wealth..

குபேர சக்தி என்பது ஒரு  பேரண்டதிலிருந்து கிடைக்கும் பலவிதமான சக்தியலைகளில் (பிராண சக்தியை போன்ற) ஒரு சக்தியே அன்றி வேறில்லை (Cosmic Energy Frequency). இந்த சக்தியானது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப் பெற்றாலும் வருடத்தில் சில நாட்களில் மட்டும் அபரிதமாக கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் சமயத்தில் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் உபாசனை மந்திரமானது இச்சக்தியை நமது பேரண்டத்தின் பிரதிபலிப்பான நமது உடல் கிரகித்துக் கொள்ள வழிவகை செய்கிறது.

SRI BALA SIDDHARSHRAM

Cosmic Energy Frequency is nothing but one of the various energies (like Prana Shakti) from a universe.  This power is available at certain times of the day but is abundantly available only on certain days of the year.  When it is available, Sri Lakshmi Kuberar Upasana Mantra allows this energy to be absorbed by our body, which is a reflection of our universe.

SRI BALA SIDDHARSHRAM

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் உபாசனை தீட்க்ஷை
நாள்:
நேரம்:
இடம்: இணையவழி (Zoom)
முன்பதிவு : 9791476947
நன்கொடை : Rs. 5001.00

ஸ்ரீ பாலா சித்தாஷ்ரம்

ALMSGIVING

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் தீபம் / SRI LAKSHMI KUBERA LAMP

குபேரனின் அருள் கிடைக்க குபேர தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குபேரன் செல்வத்தின் அதிபதி. வற்றாத செல்வத்தை நமக்கு கொடுக்கக்கூடியவர். யாருக்கெல்லாம் பணம் என்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அவர்கள் குபேர பூஜை செய்வது நல்லது.

To get the grace of Kubera one should light the lamp of Kubera and worship him. Kubera is lord of wealth. Who can give us eternal wealth. Whoever wants money to be with him forever should do Kubera Puja.

குபேர தீபத்தை வார வாரம் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து ஏற்றி மந்திர உச்சாடனம் செய்து வர எல்லா வளங்களும் கிடைக்கும். குபேர தீபம் ஏற்ற சரியான நேரம் குபேரருக்கு உகந்த நேரமான வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி ஆகும். இந்த நேரத்தில் நம் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சரிசி  மாவினால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும்.

நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பாதியில் மஞ்சளும் மற்றொரு பாதியில் குங்குமமும் தடவி, நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை  பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவேண்டும். நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும். இயன்ற வரை வீட்டில் தினமும் எலுமிச்சை பழத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். வியாபாரம் சம்மந்தப்பட்ட இடங்களில் தினமும் கண்டிப்பாக மாற்ற வேண்டும். காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட  வேண்டும்.

Keep lighting the Kubera Deepam continuously Every week on Thursdays and chant mantras. The best time to light Kubera Deepam is Thursday evening which is auspicious for Kubera between 5 PM and 8 PM. At this time, we should sprinkle water on the door of our house, make a kolam with unboiled rice flour and decorate it with a red band using Red Clay

Turmeric should be sprinkled and decorate using sandalwood, kumkum on Entrance. Cut a lemon in two, apply turmeric on one half and red kumkum on the other half, place the lemon on one side with turmeric on one side and the lemon with red kumkum on the other side. Flower should be placed on both sides of the Entrance. Change the lemon every day at home as much as possible. In places where business is concerned, it must be changed daily. The dried should be placed in a place where it cannot be stepped on.

வாழ்க்கையில் சாதாரண நிலையிலும், வேலை இல்லாமலும் இருந்தவர்களுக்கு ஒரு நிரந்தர வேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது.

பலருக்கு தொழிலில் அமோக வளர்ச்சி கிடைத்திருக்கிறது.

நலிவடைந்த நிறுவன முதலாளிகளுக்கு நல்ல தகுதியான வேலையாட்கள் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கப்பெற்று நிறுவனம் மிகுந்த வளர்ச்சி பெற்றிருக்கிறது.

தொடர்ந்த நிரந்தர வருமானம் இல்லாதவர்களுக்கு தொடர்ந்த வருமானம் கிடைத்துக் கொண்டு உள்ளது.

பலர் தமது சக்திக்கு மீறிய கடன் வாங்கி பல ஆண்டுகளாக திண்டாடியவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தனை கடனும் தீருமளவுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது

பூர்வ புண்ணியம் மிகுந்த ஆத்மாக்கள் வெகு சிலருக்கு குபேரனின் தரிசனம் கிடைக்கப்பெற்று கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கின்றனர்.

நேர்மையாளராக வாழ்ந்து வருவதாலேயே நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் மாத சம்பளம் தவிர வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும் பலவகையான உபதொழில் அமையப் பெற்று அதிக வருவாய் பெற்று நிறைவுடன் வாழ்கின்றனர்.

இப்படி பட்ட நிலையில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் அத்யாவசியமானதும் அவசியமானதும் இந்த ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் உபாசனை தந்திரம்.

இன்றைய கால கட்டத்தில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பணம் நமக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது; கொஞ்சம் அதிகமாகவே பணம் தேவைப்படுகிறது; மனிதர்கள் கர்மவினையினாலும் அறியாமையாலும் எதுவும் கிடைக்கப் பெறாமல் தவிக்கிறோம். இந்நிலை சற்றேனும் மாற அல்லது மாற்ற ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் உபாசனை தந்திரத்தை தொடர்ந்து செய்து வருவோம்.

வாரம் ஒருமுறை புதிதாக மாற்றும் பொழுது முன்னர் இருந்த அரிசி, பருப்பு, உப்பு வகைகளை பறவைகளுக்கு தீனியாக போடலாம் அல்லது பிறர் கால் படாத இடத்தில் கொண்டு போய் போட்டுவிடலாம். நீர் நிலைகளில், செடிகளில் கூட போடலாம். அதிலிருக்கும் நாணயங்களை பணம் சேர்த்து வைக்கும் இடத்தில் வைத்து விடலாம் அல்லது உண்டியலில் சேர்த்துவிடலாம் அல்லது கழுவி சுத்தம் செய்து காயவைத்து மீண்டும் அதே பானையில் வைத்து விடலாம்.

வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும். முதலில் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி விளக்கு ஏற்றுவதால்  நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். தாமரை அல்லது வாழை திரி அல்லது குபேர தீப மூலிகை எனப்படும் பெரும்தும்பை என்கிற பேய்மிரட்டி மிகவும் உகந்தது. கொடுக்கப்பட்ட மந்திர ஜெபம் செய்துகொண்டே விளக்கு ஏற்றவும்.

As we stand at the door, we should place the Kubera lamp on a wooden board or plate to our left and keep the lamp burning facing east. It is believed that by first pouring ghee or sesame oil in the lamp and lighting the lamp with two wicks, we will get the grace of Kubera. Lotus or Banana Tree or Kubera Deepa herb called Perumthumbai is very suitable for wicks. Light the lamp while chanting the given mantra.

திரு அண்ணாமலை குபேர கிரிவல தந்திரம்

அண்ணாமலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை செல்வத்தின் அதிபதியான குபேரன் (சூட்சுமமாக) வருவது வழக்கம்; அப்படி அவர் வரும் நேரத்தில் அவரது தலைமையில் நாமும் அண்ணாமலை கிரிவலம் வந்தால், அண்ணாமலையாரின் அருளும், சித்தர்களின் ஆசியும், குபேர சம்பத்தும் ஒன்றாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Once a year Kubera, the lord of wealth, used to visit Annamalai (subtly); It is believed that if we also come to Annamalai Krivalam at the time of his arrival, we will get the grace of Annamalai, the blessings of the Siddhas and the wealth of Kubera together.

கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளில் குபேரன், வான் உலகில் இருந்து அண்ணாமலைக்கு வந்து தாம் ஸ்தாபித்த குபேரலிங்கத்திற்கு ஒரு மணி நேரம் பூஜை செய்து; பிறகு அங்கிருந்து கிரிவலம் புறப்பட்டு மீண்டும் தொடங்கிய இடத்தில் கிரிவலம் முடித்து வான்வெளி செல்வதாக கூறப்படுகிறது.

On the day of Teipira Chaturthasi tithi in the month of Karthikai, Kubera came from the celestial world to Annamalai and worshiped the Kuberalingam he had established for one hour; Then it is said that the Krivalam takes off from there and ends the Krivalam at the place where it started again and goes to the sky.

தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் நாளையே தேய்பிறை சிவராத்திரி என்று பல கோடி ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

The day of Teipira Chaturthasi Tithi has been celebrated as Shivratri for millions of years.

திரு அண்ணாமலை புராண வரலாறு / Mythological history of Thiru Annamalai

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் பானை வழிபாடு / Sri Lakshmi Kubera Pot Worship

குபேர பானை என்பது மண்ணால் செய்யப்பட்ட மூன்று அடுக்கு சிறிய மட்பாண்டங்கள் கொண்ட கலசம் ஆகும். அதற்கு அழகிய வண்ணம் தீட்டி வைக்கலாம். உங்களுக்கு தெரிந்த அழகிய வேலைபாடுகள் செய்தும் வைக்கலாம். இதில் முதல் பானை பெரிய அளவிலும், அதற்கு அடுத்த இரண்டாவது பானை அதனை விட சிறிய அளவிலும், மேல் உள்ள பானை சிறியதாகவும் இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக அழகாக அடுக்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். அதனருகில் மற்றொரு சிறிய பானையில் நாணயங்கள் நிரப்பி வைக்கலாம்.

A Kubera pot is a three-tiered small pottery vessel made of clay. You can paint it beautifully. You can also make beautiful works that you know. In this, the first pot is larger, the second pot next to it is smaller, and the top pot is smaller. You can stack them beautifully and keep them in the pooja room. Another small pot can be filled with coins next to it.

குபேர பனையை பூஜை அறையின் வடக்கு திசையில் வைக்கலாம். குபேரனின் திசை வடக்கு என்பதால் வடக்கில் வைப்பது சிறந்தது. பூஜையறை இல்லாதவர்கள் அலமாரிகளில் அல்லது சமையலறையில் அல்லது மர பீரோவில் வைத்து வணங்கி வரலாம்.

Kubera palm can be placed in north direction of puja room. As Kubera’s direction is north, it is best to place it in the north. Those who do not have a puja room can worship in cupboards or in the kitchen or on a wooden desk (Cash box).

  • சிறிய பானையில் உப்பு
  • நடுத்தர அளவிலான பானையில் துவரம் பருப்பு (நாட்டு வகை)
  • பெரிய பானையில் அரிசி (பாலிஷ் செய்யாதது) அல்லது நெல்
  • தனி சிறிய மூடி இல்லாத பானையில் நாணயங்கள், பச்சை கற்பூரம் மற்றும் அஞ்சன கல்
  • Salt in small pot
  • Thuvar Dal (country variety) in a medium sized pot
  • Rice (unpolished) or paddy in a large pot
  • Coins, green camphor and anjana stone (antimony) in a separate small lidless pot

பூச நட்சத்திரம் வரும் வியாழக்கிழமை அல்லது தீபாவளி அல்லது மகா சிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்து வழிபடுவதால் மிகச்சிறந்த பலன்களை பெற்றுத் தரும். ஏனெனில் குபேரன் பிறந்த நட்சத்திரம் பூசம் ஆகும். அதி சக்தி வாய்ந்த நாள் தீபாவளி. குபேர பதவி பெற்ற நாள் மகா சிவராத்திரி.

Worshiping on the On the day of Thursday with  Pusha Natchatra or Diwali or Maha Shivratri will give you the best results. Because Kubera’s birth star is Pusam. Diwali is the most powerful day. Maha Shivratri was the day of Kubera’s inauguration..

நீங்கள் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது அந்த கலசத்திற்கும் தீபம் தூபம் காட்டி வழிபடலாம். மேலும் லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் பொழுது இந்த கலசத்தை வைத்து கொடுக்கப்பட்ட மந்திர ஜெபம் செய்து வழிபடலாம். இதனால் குபேரனின் அருளும் திருமகளான மகாலக்ஷ்மியின் அருளும் ஒருசேர நமக்கு கிடைக்கும். செல்வ வளம் பெருகும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். உணவு பொருட்களுக்கு பஞ்சமின்றி நம்முடைய குலம் வாழும். சகல ஐஸ்வர்யங்களும் இல்லம் தேடி வந்தடையும்.

குபேர கலச பூஜை / Kubera Kalasa Puja (Optional)

screenshot 20221021 160059 wordpress

கலசம்
ஒரு வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்து அதன் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம், அரகஜா, அகில், புனுகு ஜவ்வாது என எவ்வளவு வாசனை திரவியங்கள் சேர்க்க முடியுமோ அத்தனையும் சேர்த்து, தண்ணீர் நிரப்பி அதற்கு மேல் தேங்காய் மஞ்சள் பூசி எட்டு மாவிலைகளோடு வைத்து, இந்த கலசத்தை ஒரு முக்காலி மேல் அரிசி அல்லது நெல் பரப்பி வைக்கவும். மல்லிகை மாலை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம். பாதுகாப்பான இடமெனில் தங்க நகைகளும் போடலாம். இது மஹாலட்சுமி.

Kalash
Take a silver or copper anvil and add as many spices as you can like Rosewater, elakkai, cinnamon bark, sandalwood, aragaja, akhil, punuku javvadu, fill it with water, cover it with coconut turmeric applied coconut and place it on a tripod (stand) with eight mango leaves. Spread rice or paddy on the stand and place kalas. Jasmine garland can be decorated with lotus flowers. Gold jewelery can also be placed if in a safe place. This is Mahalakshmi.

குபேர எந்திரம்/ KUBERA YANTRA

screenshot 20221021 160224 chrome

அதற்கு முன் பச்சரிசி மாவு கொண்டு குபேர சக்கரம் எண்களோடு கோலம் போடவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ள எண்களின் எண்ணிக்கையிலான காசுகள் வைக்க வேண்டும். மொத்தம் 216 காசு தேவைப்படும். அடுத்தமுறை இதே பூஜை செய்யும் போது தங்கம் வெள்ளியாக வைக்க அருள வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். சக்கரத்தை உதிரி பூக்களால் அலங்கரிக்கவும். குபேரன் படம், பிள்ளையார் படம் எல்லாம் வைக்கலாம். வலம்புரி சங்கு. கல் உப்பு ஜாடி என லட்சுமி அம்சமெல்லாம் வைக்கலாம்.  இந்த செல்வம் வாழையடி வாழையாக தங்கவேண்டும் என்பதற்காக பூஜையில் வாழைப்பூ அவசியம்.

In front of Kalasa that you should make a kolam with the numbers of Kubera chakra with using unboiled rice flour. No of Coins must be placed in chakra in a grid. A total of 216 coins is required. Next time when you perform the same pooja, pray for grace to change the gold to silver. Decorate the wheel with spare flowers. Kuberan’s film and Pillaiyar’s film can be put. Valampuri Conch. All Lakshmi aspects can be kept like stone salt jar. Banana flower is necessary in the puja so that this wealth should remain as a banana under the banana.

நைவேத்யம்
லட்சுமிக்கு 5 வகை கனிகள். அதில் செவ்வாழை , பெருநெல்லி, மாதுளை அவசியம்.
குபேர மகாராஜாவுக்கு உலர்திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, ரவா கேசரி, பாதாம்பால் இப்படி வசதிக்கேற்ப.

Naivedyam
5 types of fruits for Lakshmi. Marshmallow, gooseberry and pomegranate are essential in it.
Kubera Maharaja was given Dry Grapes, cashews, almonds, pistachios, rava kesari and almond milk as per convenience.


தூப தீபம் காட்டி பூஜையை நிறைவு செய்து பால் , கேசரி போன்ற பிரசாதங்களை வினியோகம் செய்து விட்டு மற்றது அப்படியே இருக்கட்டும்…

அடுத்த நாள் காலை மறு பூசை செய்து மகாலட்சுமி மந்திரம் 108 சொல்லி பூசித்து சிறிது நேரம் விட்டு கலசம் எடுத்து உள்ளே உள்ள தீர்த்தத்தை வீடு முழுக்க தெளித்து சிறு பாட்டில்களில் லீக் இல்லாமல் அடைத்து கேஷ் பாக்ஸ் மற்றும் தொழில் இடங்கள் என வைத்து கொள்ளலாம்…

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தில் அல்லது வெள்ளிக்கிழமைகளில்
ஸ்ரீமஹாலக்ஷ்மி குபேர ஸம்பத்து பூஜை செய்ய சகல சம்மத்தும் பெற்று வாழ்வாங்கு வாழுவும் பேரும் புகழும் பெறுவார்கள்.

Complete the pooja by lighting the incense lamp and distribute the offerings like milk and kesari and leave the rest as it is…

On the next morning, perform pooja again by chanting mahalakshmi mantra 108 and leave for some time, take kalasam and sprinkle the tirtha inside the whole house and keep it in small bottles without leak and keep it as cash box and business places…

On every full moon day or on Fridays
By performing Sri Mahalakshmi Kubera Sampathu Puja, they will get all the consent and get prosperity, fame and fame.

பணம் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமாக வந்து கொண்டிருக்க வேண்டும் என்றால் அன்னை மகாலட்சுமியின் அருளும் குபேர பகவான் அருளும் மிக அவசியம். நம்மிடம் இருக்கும் பணத்தை மதிக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் எழுதி வைக்க வேண்டும். கணக்குகளை எழுதி வைக்க கணக்கு வழக்கின்றி பணம் தருவேன் என்று குபேர பகவானே கூறியுள்ளார்.

வாஸ்து / Vastu

வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிதளவு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம்.

பணம் வைக்கும் இடம்
வாஸ்துபடி தென்மேற்கு திசையில்தான் நாம் பணத்தை வைக்க வேண்டும். பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும்.

சேமிப்பு முதல் செலவு
சம்பளப்பணம் வந்த உடன் சேமிப்பு முதல் செலவாக இருக்கட்டும். எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்காக சீட்டு போட்டு வைத்து இருப்பார்கள் அல்லது சேமிப்பு கணக்கு துவங்கி இருப்பார்கள் அது போன்ற சேமிப்பதற்காக ஒரு தொகையை முதல் நாளன்று நீங்கள் செலவு செய்தால் நிச்சயம் உங்களுக்கு பன்மடங்கு லாபம் தரும் பணம் சரளமாக புழங்கும்.

குல தெய்வத்திற்கு சேமிப்பு
முதல் நாள் சம்பள தொகையிலிருந்து 101 ரூபாயை மட்டும் தனியாக எடுத்து உங்கள் குல தெய்வத்திற்கு என்று சேமித்து பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இப்படி செய்து வந்தால் வருடம் ஒரு முறை குல தெய்வ கோவிலுக்கு சென்று அந்த பணத்தை கொண்டு செலவிட்டு வந்தால் உங்களுக்கு குலதெய்வ அருளும், அள்ள அள்ள குறையாத செல்வமும் பெருகும்.

முதல் நாளில் கடன் தர வேண்டாம்
சுய தொழில் செய்பவர்களாக இருந்தாலும் கூட அன்றைய நாள் செலவை அன்றே செய்யாமல், மாதத்தின் சம்பளமாக கணக்கு வைத்து செய்து பார்த்தால் நிறையவே மிச்சப்படுத்தலாம். சம்பளம் வந்த உடனே அதை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது என்பது முக்கிய விதி. முதல் நாளன்று எப்பொழுதும் கடனை கொடுக்காமல் அதற்கு அடுத்த நாள் நீங்கள் கடன் கொடுக்கலாம்.

பூஜை அறையில் பணம் வைக்காதீர்கள்
சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து சிலர் பூஜை அறையில் வைப்பார்கள். பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

பெண்கள் கையில் மந்திரம்
பெண்கள் மாதத்தின் முதல் நாள் அன்று பிள்ளையார் சுழி போட்டு ஒரு தாளில் வரவு, செலவு கணக்கை எழுதி வைத்து வந்தால் அந்த மாதத்தில் பணம் அபரிமிதமாக இருக்கும். சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு அரிசியில் புதையுமாறு செய்யவும். அவ்வப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஓரிரு நாணயங்களை போட்டு வைக்கலாம். இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும். நாணயங்களை எடுத்து கொண்டு அரிசியை சமைத்து காக்கைக்கு வைக்கலாம்.

பண வரவு அதிகரிக்க…
வீட்டின் வடக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ஈசான்ய மூலையில் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை கட்டுக்குள் அடங்கி இருக்கும். மஞ்சள் வகையில் அரியதாக கிடைக்கும் கரு மஞ்சளை சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியால் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொடுத்த கடன் வசூலாகும்
கருமஞ்சளை (black turmeric) அரைத்து நெற்றியில் விபூதி போல பூசி வர வசூலாகாத பணம் வசூலாக, இதை நம் கையோடு எடுத்துச் செல்லலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகை கூட வசூலாகிவிடும். நீண்ட நாட்களாக இருந்து வரும் கடன் பிரச்சனைகள் தீர, இதை பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.

சுப செலவு அவசியம்
பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அதை நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும். பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.

உப்பும் ஊறுகாயும்
உப்பு மகாலட்சுமியின் அம்சம்.. ஊறுகாய் குபேரருக்கு பிடித்தமானது. எனவேதான் சம்பளம் வாங்கிய உடன் முதலில் கல் உப்பு வாங்குவதற்கு செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். வீடு பால் காய்ச்சும் போது உறவினர்கள் பலரும் புது வீட்டிற்கு கல் உப்பு கொண்டு செல்வதும் அதற்குத்தான். அதே போல நம்முடைய முதல் செலவு ஊறுகாய் வாங்குவதாக இருக்கட்டும். பெரிய பாட்டில் ஊறுகாய் வாங்க முடியாவிட்டாலும் சின்ன பாட்டிலாவது ஊறுகாய் வாங்க வேண்டும்.

தானம் செய்யுங்கள்
நம்மை விட வசதி குறைவான நிலையில் உள்ளவர்களுக்கும், உங்களின் ஆன்மீக குருவிற்கும் ஏதாவது ஒரு பொருள் வாங்கித்தர வேண்டும். அவர்களின் வாழ்த்து நம்மை வாழ வைக்கும். உங்களால் இயன்ற ஏதாவது வாங்கிக் கொடுங்கள் நீங்கள் மேலும் மேலும் அதிக பணம் சம்பாதிக்கவும் நிறைய தானம் செய்யவும் தேவையான பொருள் உங்களைத் தேடி வரும். குருவின் அருளாசி ஒன்று போதும் குபேர யோகம் கிடைப்பதோடு அன்னை மகாலட்சுமியின் அருள் பார்வையும் உங்களுக்கு கிடைக்கும்.

நம்பிக்கையோடு செய்யுங்கள்
பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நாம் பணக்காரர் ஆக இருப்பது போல நம்ப வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கையும் எண்ணமுமே நம்மை நல்ல நிலைமைக்கு உயர்த்தும். லாட்டரியில் ஜாக்பாட் அடித்து திடீர் கோடீஸ்வரர் ஆனவர்கள் இருக்கிறார்கள். மறைமுக வருமானம் மூலம் பணக்காரர்கள் ஆனவர்கள் உள்ளனர். முன்னோர் சொத்துக்கள் மூலமும் புதையல் போல திடீரென பணம் கிடைத்தும் பணக்காரர்கள் ஆனவர்கள் உள்ளனர். எனவே நமக்கும் நல்ல முறையில் பணம் தேடி வரும், நாம் கோடீஸ்வரர் ஆவோம் என்ற நம்பிக்கையும் வேண்டும். நாமும் பணக்காரர் ஆவோம் என்று முதலில் நம்புங்கள் பணம் தானே தேடி வரும்.

வாசனையான பொருட்கள்
பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பீரோவில் பச்சை கற்பூரம் (Edible Camphor) போட்டு வைக்கலாம். பொதுவாகவே வசம்புக்கு (Acorus calamus / Sweet Flag / Calamus) பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. வசம்பில் ஒரு சிறு துண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது. பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் சீக்கிரமே உங்களிடம் தேடி வரும்.

கற்பூரவள்ளி செடி (Coleus Aromaticus)
ஒரு சிறிய தொட்டியில், கற்பூரவள்ளி செடியை நட்டு வீட்டுவாசலில் வைத்தோமேயானால், வீடு சுபிட்சம் அடையும் அந்த செடியானது, செழிப்பாக வளர வளர உங்களது முன்னேற்றமும் செழிப்பாகும். நம்முடைய வீட்டிற்குள், கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியையும் நுழைய விடாமல் பாதுகாக்கும் சக்தியும் இந்த செடிக்கு உண்டு.

மல்லிகைப்பூக்கள்
கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும் மல்லிகை பூச்செடி இருக்கும் வீட்டில் நிச்சயம் மன மகிழ்ச்சி இருக்கும். மல்லிகைப்பூ என்பது லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பூ. வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் மல்லிகைப் பூக்களை பணம் கொடுத்து வாங்குவது நமக்கு சுபிட்சத்தை கொடுக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் மல்லி பூ கிடைக்கும் போதெல்லாம் அதை வாங்கி தங்களுடைய தலையில் சூடிக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் தெய்வங்களுக்கு மல்லிகைப் பூக்கள் வாங்கி அலங்கரிக்க நம் வீட்டிற்குள் மகாலட்சுமி குடியேறி விடுவாள்.


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

1 thought on “ஸ்ரீ லக்ஷ்மி குபேர உபாசனை தீட்க்ஷை / SRI LAKSHMI KUBERA UPASANA DEEKSHA”

Leave a Comment

0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop
Scroll to Top

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading