ஸ்ரீ சக்கர மகிமைகள் / Glories of Sri Chakra

புராண இதிகாசங்களில் கூறப்பட்ட ஸ்ரீ சக்கர மகிமைகள்,  பூஜை முறைகள் மற்றும் பலன்கள்

Sri Chakra of Glories, Methods of Worship and Benefits mentioned in Puranic Legends

Unlock Transformative Benefits with the Sacred Ashta Ganda Sri Chakra

The powerful Ashta Ganda Sri Chakra is designed to address a wide range of life challenges, offering practical and spiritual solutions for today’s fast-paced world.

Strengthen Relationships: Resolve marital delays, foster harmony in existing relationships, and receive blessings for parenthood.

Financial Growth: Overcome business hurdles, attract wealth, boost cash flow, and recover debts effortlessly.

Property and Vastu: Settle property disputes and correct Vastu imbalances for a harmonious living and working environment.

Health and Wellness: Experience relief from lingering illnesses and alleviate mental stress, including depression and anxiety.

Career Success: Enhance job prospects, achieve career growth, and excel in competitive exams like IAS/IPS.

Spiritual and Astrological Harmony: Remove negative energies such as Kan Dhristi Dosha, Navagraha Dosha, and Pitru Dosha, while neutralizing ancestral or karmic curses.

By installing the Ashta Ganda Sri Chakra in your home, office, factory, or business space, you create an environment that fosters success, positivity, and holistic well-being. It’s more than just a spiritual tool – it’s a pathway to achieving your goals with divine blessings and modern practicality.

Take a step towards prosperity and harmony. The Ashta Ganda Sri Chakra is your sacred companion for a balanced and fulfilling life.

சகலமும் தரும் ஸ்ரீ சக்கரம்
தடைபட்ட அனைத்து விஷயங்களும் விரைவாக சரியாகும்.

#திருமணத்தடை…
#குழந்தை பாக்கியம்….
#பூர்விகா சொத்து பிரச்சனைகள்…
#வாஸ்து பிரச்சனை
#தொழில் சார்ந்த பிரச்சினைகள்…
#தடைபட்ட பணங்கள்…
#தீராத நோய்களுக்கு தீர்வு…
#பொன் பொருள் சேரும் #பணப்புழக்கம் அதிகரிக்கும்…
#கண் திருஷ்டி தோஷம் நீங்கும்…
#கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்த…
#அனைத்து விதமான தோஷங்களும் நீங்க…
#மனசோர்வு நீங்கி நிம்மதி பெற…
#அரசியலில் / அலுவலகத்தில் உயர் பதவி பெற…
#தோல்விகள் அகன்று வெற்றிகள் குவிய…
#ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கான தேர்வில் வெற்றி அடைய…
#நவகிரக தோஷம் மற்றும் தசா புத்தி பலன்களால் வரும் தொல்லைகளில் இருந்து விடுபட….
#முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக…

விஷேசமாக எழுதும் அறிய அஷ்ட கந்தத்திலான ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து பலன் பெறுங்கள்.

ஸ்ரீ சக்கர ராஜம்

மும்மூர்த்திகளில் முதல்வன், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், பரம வைராக்கி ஆகிய பரமசிவன் பார்வதி தேவிக்கு பல்வேறு தந்திரங்களை உபதேசித்த பின்னர், தேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து தந்திரங்களின் சாரமாக ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ தந்திரத்தை உபதேசம் செய்தார். இதுவே ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ சக்ர உபாஸனை அல்லது ஸ்ரீ வித்யா உபாஸனை என்றும், இதையே நமது சித்த குரு மகான்கள் வாலை பூஜை, வாலை பரமேஸ்வரி பூஜை, நாற்பத்து முக்கோணம் பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. வாலை தாயை வணங்காத, அவளை பூஜிக்காத சித்த பெருமக்களே இல்லை. அனைத்து சித்த குரு மகான்களும் இந்த உபாசனை பூஜையை செய்தே சித்தி பெற்று சித்தர்களானார்கள்.

After teaching various Tantras to Goddess Parvati, Paramashiva, the first of the Trinity, The Creator and warrior & hero of millions of million great universe, the greatest zealousness, in accordance with the Goddess’ request, preached the Sri Vidya, The Essence of all Tantras. This is Sri Pura Upasana or Sri Chakra Upasana or Sri Vidya Upasana and this is what our Siddha Guru Mahanas call Valai Puja, Valai Parameshwari Puja and Forty Triangle Puja. There are no Siddha Gurus who do not worship Valai Mother and do not worship her. All Siddha Gurus became Siddhas (Equals to God & Goddess) by performing this Upasana Pooja.

வேத ரகசியங்களை உணர்த்துவது புராணம். வேத வியாசர் புராணங்களைத் தொகுத்தளித்தவர். அவற்றுள் பிரம்மாண்ட புராணம் எனும் புராணம் மகிமை வாய்ந்ததாகும். அதில் ஒரு பகுதியான லலிதா உபாக்யானத்தில் ஸ்ரீ சக்ர ரகசியம் கூறப்பட்டுள்ளது. அகஸ்திய மகா முனிக்கு மகாவிஷ்ணுவின் வடிவமாகிய ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ சக்ர ரகசியத்தை உபதேசித்தருளினார். தசரதர் காமாட்சி அம்பிகையை உபாசனை செய்த புண்ணியத்தால் ஸ்ரீ ராமனையே திருமகனாகப் பெற்ற மகிமையையும் அதில் காணலாம்.

Puranas convey Vedic secrets. Veda Vyasa compiled Puranas. Among them the legend of Bramanda Purana is glorious. A part of it is the secret of Sri Chakra in Lalita Ubhayana. Sri Hayagrivar, a form of Lord Vishnu, taught the secret of Sri Chakra to Agastya Maha Muni. It also shows the glory of Dasaratha getting Lord Rama as his son due to his worship of Goddess Kamakshi.

Agastya bowed to Hayagriva and asked, “What are the glories of Sri Chakra, the Yantra of the Goddess? How to worship it ” To pray, Hayagrivar says: “The yantra of the Goddess is Sri Chakra. She is Goddess of Tripuram (Three Worlds) and she is Sri Mahalakshmi. The Goddess herself saw her astrological form with her own eyes. That is Sri Chakra. Therefore Adilakshmi herself is the philosophy of Sri Chakra. By consecrating it, Sri Vishnu took the incarnation of Mohini. Ishvara became Sarva Vidyadhara. Brahma also acquired the power to create everything”. He also explained to Agathiya Maharishi in detail the methods of drawing Sri Chakra, Sri Chakra systems and Rules and Regulations to worship / pujas, the benefits of various pujas such as Nava Avarana Puja, Tithi Nitya Puja.


ஸ்ரீ சக்கர வழிபாட்டு பலன்கள் / Benefits of Sri Chakra Worship

ஒரு உண்மை, நேர்மை, சமதர்மம் மறைந்து பொய்மையும், போர்களும் இயற்கைப் பேரழிவுகளும், உலகைச் சுட்டெரித்து வரும் இந்த கலி யுகத்தில் வெப்பமயச் சூழலில், இயற்கையே வடிவான அம்பிகையைக் குளிரச் செய்யும் ஆற்றல் ஸ்ரீ சக்ர வழிபாட்டில் மறைந்துள்ளது என்பது பிரம்ம ரகசியம். பலமுறை ஆதிசங்கரர் இதை நிரூபித்துள்ளார். உக்கிரம் நிறைந்த பல அம்பாளின் திருக்கோவில்களில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்து சாந்த மூர்த்தியாக செய்தார் என்பது வரலாறு. இங்கே அம்பாளின் திருவுருவம் என்பதே இந்த பேரண்டம் ஆகும். உக்கிரம் என்பது இயற்கை சீரழிவு. மேலும் அச்சுறுத்தும் பாம்பு முதல் அயரவைக்கும் அம்மை நோய் வரை அனைத்தையும் அம்பிகையாகப் பார்ப்பது நம் சமய மரபு. பிணியாக வருபவளும் அவள்தான். பிணிக்கு மருந்தாக வருபவளும் அவள்தான், அவளை வழிபட்டாலே துன்பம் யாவும் தீரும் என்பதில் சந்தேகமில்லை.

A Truth, Honesty, Samadharma disappearing and falsehood, wars and natural calamities burning the world in this hot climate of Kali Yuga, the power to cool nature’s nature-shaped Ambika (Goddess) is hidden in Sri Chakra worship is the ultimate secret called Brahma Ragashya. Adi Shankar has proved this many times. It is history that Sri Chakra was consecrated as Shanta Murthy in many temples of Goddess, which was filled with anger. Here this Great Universe is the images of Goddess. Anger is a natural degenerate. And it is our religious tradition to view everything from the menacing snake to the debilitating measles with ambivalence. She is also the one who comes as a slave. She is also the antidote to dew, and there is no doubt that worshiping her will remove all suffering.

அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் போன்று எங்கும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் ஒற்றுமையும், அமைதியும், சகல செல்வங்களும் முக்கியமாக ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பும் ஏற்படும். ஸ்ரீ சக்ர வழிபாட்டிற்கு நூற்றியெட்டு மந்திரங்கள் அடங்கிய அஷ்டோத்திரமும், நூற்றியென்பது மந்திரங்கள் கொண்ட கட்கமாலா ஸ்தோத்திரமும், முன்னூறு மந்திரங்கள் கொண்ட லலிதா திரிசதியும், ஆயிரம் நாமாவளிகள் கொண்ட லலிதா சஹஸ்ரநாமமும், இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகிய பஞ்ச தசாக்ஷ்ரி, லகு ஷோடசி, ஷோடசி, மகா ஷோடசி, சர்வ சௌபாக்ய சிவ சோடசி போன்ற ஸ்ரீ வித்யா மூலமந்திரங்களும் குரு முகமாக அறிந்து உபதேசம் பெற்றுக் கொள்வது சாலச்சிறந்தது. தமிழில் திருமந்திரம் மற்றும் அபிராமி அந்தாதி ஆகியவற்றில் ஸ்ரீ வித்தை பற்றியும், ஸ்ரீ சக்ரம் பற்றியும் தெளிவான குறிப்புகள் உள்ளன.

If Sri Chakra is consecrated and worshiped anywhere like in Offices, business premises factories, educational institutes, scientific labs to gets unity, peace, all wealth and protection from dangers. Ashtotra Namavali with one hundred and eight mantras, Kadkamala Stotra with one hundred and twenty mantras, Lalita Trisati with three hundred mantras, Lalita Sahasranama with one thousand namavalis, Pancha Dasakshri, Lagu Shodasi, Shodasi, Maha Shodasi, Sarva Saubhagya Shiva Sodasi etc. are must learn from enlightened Guru for Sri Chakra worship. It is better to receive instruction. There are clear references on Sri Vidya and Sri Chakra in Tamil from Thirumantram and Abhirami Antadi.

There is no sectarianism in Ambigai worship. “Nirbeda” – She is beyond all afflictions. Since Ambika is a woman in the form of a mother, women can also worship Sri Chakra by keeping Sri Chakra in their homes. Women are fully eligible for Sri Chakra worship.

ஸ்ரீ நாகராஜ் பாபா சித்தாஸ்ரம் / Shri Nagaraj Baba Siddhasram

புராணங்கள் கூறும் ஸ்ரீ சக்ர வழிபாட்டு முறைகளும் மகிமைகளும் / Sri Chakra Rituals & Glorifications According to the Puranas

ஸ்ரீ சக்ரம் எங்கே இருக்கிறதோ அங்கே துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அனுகவே முடியாது. எதிரிகள் தொல்லை போன்றவைகளுக்கு வாய்ப்புகளே இல்லை. ஸ்ரீ சக்ரம் எந்த இல்லத்தில் உள்ளதோ அங்கு எவ்விதமான வாஸ்து தோஷங்கள் இருப்பினும் அவை வேலை செய்யாது கட்டுப்படும். ஸ்ரீ வித்யா உபாசகர்களுக்கு எந்த விதமான ஜாதக, கிரக தோசங்களும் பாதிக்காது.

Where Sri Chakra is there, evil forces and witchcraft like witchcraft and sorcery cannot be experienced. There is no chance of enemy harassment etc. Whatever Vastu doshas there are in any house where Shri Chakra is, they will not work. Effects of worst Jataka (Birth Chart) or Graha Doshas can’t affect Sri Vidya Upasakas.

கோடிக்கணக்கான ஆலயங்களில் பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, ஒரு முறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.

Sastra Puranas say that one can easily get many times more benefits by properly worshiping Sri Chakra once than the benefits of worshiping in crores of temples.

பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் ஸ்ரீ சக்கரத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பூஜித்து எல்லா பௌதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை (முக்தி/ மறுபிறவி சுழற்சி விடுதலை) அடைய முடியும்.

According to the Brahma Purana, a man who worships Sri Chakra, which fulfills all the desires of the mind, becomes Tanyana. Anyone can worship and enjoy all material pleasures and attain Paramapadam (mukti/liberation from cycle of rebirth).

பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் ஸ்ரீ சக்கரத்தை விதிமுறைப்படி ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!

The Brahmavaivartha Purana says that even those who worship the Sri Chakra just once according to the rules can attain immeasurable bliss as long as the Suns and Moons last!

சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை! இவற்றை எல்லாம் உயர்வானது ஸ்ரீ சக்கர தரிசனம் அல்லது ஸ்ரீ சக்கர பூஜை.

According to Shiva Nirnaya Ratnaaharam, worshiping a gold-plated Shiva linga is a million times more beneficial than worshiping a stone Shiva linga. Worshiping a gem-encrusted lingam is more beneficial than that. But the puja or darshan of Mercury lingam is much more beneficial. There was no Shiva Lingam in the world higher than the Mercury Lingam; Not going to be! Above all these Sri Chakra Darshan or Sri Chakra Pooja is highly benefited.

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும் கூட, ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்!

According to the Shiva Purana, a sinner who killedcows, an ungrateful man, a killer of warrior, a murderer of an unborn child, a murderer of a mother and father can get rid of all sins and attain salvation by worshiping the Sri Chakra!

வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி ஸ்ரீ சக்கரத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலி. அவனைவிட அதிர்ஷ்டசாலி ஸ்ரீ சக்கரத்தை முறையாக தர்சனம் செய்பவனே. அப்படிவனையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!

According to Vaaiviya Samhita the only best and easiest way to get long life, health, wealth and everything we want in our life is to worship Sri Chakra. A person who visited Rasalingam (Mercury) is more fortunate than one who visited twelve Jyotirlingams. More fortunate than him is the one who regularly sees the Sri Chakra with proper guidance. “That’s the one I like the most!” – Lord Shiva has said that himself!

சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் ஸ்ரீ வித்யா தந்திரம் எனும் வாலை பரமேஸ்வரியை, முறையாக ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

According to the book Sarvadarsana Sangrigam, those who properly worship the Goddess Vaalai Parameswari ( Sri Bala Tripura Sundari) in Sri Vidya Tantra, do not ever have the fear of death. Besides, Lord Shiva is said to have told Parvati that they would never see poverty in their home.

இரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை ஸ்ரீ சக்கரத்தை முறையாக பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், ஸ்ரீ சக்கரத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

According to the book Rashaarnava Tantra, if a person properly worships Sri Chakra just once, he will get siddhis such as virtue, wealth, pleasure and liberation in his life. Worshiping the Sri Chakra is a million times more beneficial than worshiping the famous thousand lingams.

இரச சமுச்சயம் என்ற நூலில், ஸ்ரீ சக்கரத்தை தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்த உபாயமுமில்லை. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது.

In the book Rasha Samuchayam, by constantly worshiping Sri Chakra, one gets freedom from all kinds of diseases. There is no other way to keep man disease-free in old age. All benefits like education, knowledge, wealth, wealth, happiness, peace, prosperity, wealth of wealth, compassion of people etc automatically come to devotees who worship Sri Chakra. It also gives Ashtasiddhis (Eight Boons) and Navanidhis (Nine Abundance).

இந்த ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வாலை தாயின் ஸ்ரீ சக்கர உபாசனை தீக்ஷை புண்ணியம் செய்தவர்களுக்கும், ஆசை இல்லாதவர்களுக்கும், இதுவே கடைசி பிறவியாக பிறந்தவர்களுக்கும், மறுபிறவி இன்றி பிறப்பு இறப்பு சுழற்சியில் விடுதலை பெற்று பிறவாமை வேண்டுபவர்களுக்கும், தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்க முடியும். இதை பேராசைகாரர்கள் அடைய நினைத்தால் அழிவு உண்டாகும். தற்போது கடைகளிலும், சில ஆன்மீக மடங்களிலும் யந்திரங்கள் முறைப்படி சுத்தி செய்யப்படாத சாபநிவர்த்தி செய்யப்படாதவைகளே கிடைக்கின்றன. மேலும் தவறான கோணங்களை கொண்ட ஸ்ரீ சக்கரங்களேயாகும். அவற்றை வாங்கி பூஜிப்பதால் எந்த பலனும் இல்லை. அச்சடிக்கப்பட்ட யந்திரத்தை உபயோகிக்க பயனில்லை. அச்சடிக்கப்பட்ட யந்திரத்தை தியானம் (தாரணை) செய்ய உபயோகிக்கலாம்.

ஸ்ரீ சக்கரம் பெறும் முறைகள்: தங்களுக்காக தாங்களே முறையாக கற்று ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கி வழிபடலாம்.

தங்களின் குருமார்கள் பூஜித்த ஸ்ரீ சக்கரத்தை அவர் இறந்த பிறகு பெற்று பூஜிக்கலாம்.

தங்களுக்குக்காக குருமார்களால் உருவாக்கி தரும் ஸ்ரீ யந்திரத்தை பூஜிக்கலாம்.

இதைத்தவிர வேறெந்த முறையிலும் வாங்கி உபயோகிப்பதால் பலனில்லை என்கிறார்கள் நமது சித்த பெருமக்கள்.

ஏனெனில் ஸ்ரீ சக்கரம் வரையும் போது பல நடைமுறை விதிமுறைகள் உள்ளன, ஸ்ரீ சக்கரத்தில் பல்வேறு கணக்கீட்டு நுட்பங்களும் இருக்கிறது.

உதாரணமாக, தங்களுக்கு தாங்களே முறையாக கற்று ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கினாலும் சரி அல்லது தங்களின் குருமார்கள் உருவாக்கினாலும் சரி பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் படி தங்களின் பட்சியானது ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே உருவாக்கப்பட்ட யந்திரங்களே பூஜிக்க உகந்ததாக இருக்கும். முழுமையான பலன்களும் கிடைக்கும். மேலும் தங்கத்தால் ஆன எழுத்தாணி அல்லது முள்ளம் பன்றியின் முட்களை கொண்டு வரைய வேண்டும். இயலாத பட்சத்தில் நவலோகம், அஷ்டலோகம், பஞ்சலோகம் உபயோகிக்கலாம். இதுபோன்ற பல விதிமுறைகள் உண்டு. மிக முக்கியமாக ஸ்ரீ சக்கரத்தின் முக்கோண அமைப்புக்கள் தங்க விகிதத்தில் (The Golden Ratio) அமைக்கப்பட வேண்டும். அவற்றை முறையாக அனுசரித்து விரதமிருந்து, ஏற்கனவே சித்தி செய்த மந்திரத்தை உச்சாடனம் செய்து ஸ்ரீ சக்கர யந்திரத்தை உருவாக்க வேண்டும்.

அனைத்து ஆன்மீக அன்பு உறவுகளும் தங்களுக்கான யந்திரத்தை தாங்களே உருவாக்கி பூஜித்து அனைத்து பலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.


அர்ச்சனை மலர்களும் பலன்களும்

வெண்மை நிறமுடைய வாசனை மிகுந்த மலர்களால் ஸ்ரீ சக்ரத்தை அர்ச்சிப்பவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையும். கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி அடைவர். “சகலகலாவள்ளி மாலை” சொல்லி இவ்வழிபாட்டைச் செய்யலாம். 48 நாட்கள் விரதமிருந்து இவ்வழிபாட்டினை நெய்ப்பாயசம், வடை, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். பிறகு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால் வழிபடுவோரின் நாவில் சரஸ்வதி தாண்டவமாடுவாள்.

ஸ்ரீ சக்ரத்திற்கு துளசியாலும், தாமரையிதழ்களாலும் அர்ச்சனை செய்து, 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் தன ஆகர்ஷணமும், லக்ஷ்மி கடாட்சமும் நிறையும். சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் மற்றும் தேன் நிவேதனம் செய்வது சிறப்பாகும்.

அதேபோல், சிவப்பு அரளி மற்றும் வெள்ளை அரளியால் அர்ச்சித்து எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் படைத்திட தொழில், உத்யோகம், அரசாங்க அனுகூலம் ஏற்படும்.

மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் நோய்கள் அகலும், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகள் தீரும்.

ஸ்ரீ சக்ரத்தில் தேவியை ஸ்ரீ பாலா எனும் குழந்தை வடிவாக தியானித்து பால் அன்னம், தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு ஏற்படும்.

அமாவாசைக்கு அடுத்த தினமான பிரதமை முதல் பௌர்ணமி வரை ஸ்ரீ சக்ரத்தை முறைப்படி பூஜித்தால் (திதி நித்யா பூஜை), தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைவர்.

நோயாளிகள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) அர்ச்சித்து வர நோயிலிருந்து விடுபடுவர்.

ஸ்ரீ சக்ரத்தில் தாரம்பிகை (ஸ்ரீ தாரா தேவி) மூல மந்திரத்தைக் கொண்டு ஆவாஹனம் செய்து வழிபட்டால் வெளிநாடு சம்பந்தபட்ட தொழில், உத்யோகம், வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் மகன், மகள், உற்றார், உறவினர் நலனுக்காகவும் இவ்வாறு வழிபடலாம்.

ஸ்ரீ தாரா தேவி

பொது இடங்களாகிய ஆலயங்கள், திருமடங்கள், தியான பீடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லோரும் நலம் பெற வேண்டி “பிரஜா பிரதிஷ்டை” முறைப்படி ஸ்ரீ சக்ரம் அமைக்கபட்டால் ஒற்றுமையும், அமைதியும் அன்பும் உலகெங்கும் நிலவும்.

ஸ்ரீ சக்ர பூஜை செய்யும் சுமங்கலிகள் மற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், பூச்சரம், மஞ்சள் கயிறு, வளையல், இரவிக்கை துணி ஆகிய மங்கலப் பொருட்களை வழங்கி அவர்களின் நல்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்வது, கணவன், மனைவி, குழந்தைகளுடன் இவ்வழிபாட்டினைச் செய்வது மிகவும் நல்லது.

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி

வாருங்கள் நாமும் ஸ்ரீ வித்யா எனும் வாலைத் தாயின் உபாசனை தந்திரம் பெற்று ஸ்ரீ சக்கர பூஜை செய்து பல வெற்றிகளை பெற்று வாழ்க்கை தரத்தையும் பொருளாதார தரத்தையும் பிறவாமை / முக்தி / ஆத்ம விடுதலை ஒருசேரப் பெறுவோம்.

இது மிகவும் கடினமானது என்று நீங்கள் உணர்ந்தால்…

இந்த பயணத்தில் எங்கள் உதவியை நீங்கள் விரும்பினால்… 

நீங்கள் ஒரு எளிய படிப்படியான அணுகுமுறையை பின்பற்ற விரும்பினால்…

உங்களுக்கு விரைவான வழிகாட்டப்பட்ட அணுகுமுறை தேவையெனில்…

மேலும் தகவல்கள் மற்றும் ஆலோசனைகள், ஆன்மீக சிகிச்சைகள் மற்றும் பலதரப்பட்ட தியான வகைகள் & தந்திர தாந்த்ரீக வித்தைகளை கற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ வித்யா ஸ்ரீ பீடத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

If you find this too difficulty …

If you would like our help on this spritual journey…

If you want to follow a simple step-by-step approach…

If you need a shortcut and a guided approach…

Contact Sri Vidya Sri Peedam for more information and consultation, various types of meditation & learning Tantric techniques.


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

5 thoughts on “ஸ்ரீ சக்கர மகிமைகள் / Glories of Sri Chakra”

  1. Dr. Gopalan G.

    எல்லாப் புகழும் இறைவனுக்கே🙏🙏🙏 எதுவாகிலும் கொடுப்பினை உள்ளோர்கே கிடைக்கும். 😇 நம் எண்ணங்களை பிரபஞ்சத்தில் பயணிக்க செய்வோம். 🤟பிரபஞ்சம் நமக்கு தேவையானதை காட்டும் 👍👍நுகர்வோம்😁வாழ்க வளமுடன்🤝🤝🤝🙏

  2. Dr. Gopalan G.

    அற்புத வாழ்வின் அளப்பரிய பொக்கிஷங்கள். கேட்பதற்கு, பார்பதற்கு, நுகர்வதறக்கு கொடுப்பினை வேண்டும். மேலும் இதனை நம்முன்னே அறிமுகப்படுத்த, நமக்காக செயல்படுத்த வெகு உத்தம தன்மையுள்ள உம் போண்ற குரு கிடைப்பது என்பது அரிதிலும் அரிய ஆனந்தம். நான் முழுமையாக மகிழ்கிறேன். எனக்கு இது போன்ற குருவை காண்பித்த இறைவனுக்கு நன்றி. குருவிற்கு இன்றய மாசி மக சிறப்பு பாத சமர்ப்பணம். எல்லோர்க்கும் எல்லாவும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன். குருவே சரணம்.

  3. Pingback: ஸ்ரீ வித்யா தந்திர உபாசனை இரகசியங்கள் // Secrets of Shri Vidya Tantra Sadhana – Sri Baba Siddhashram Saba

  4. Pingback: சகலமும் தரும் ஸ்ரீ சக்கரம்!/ Sri Chakra that gives Everything! – Sri Baba Siddhashram Saba

Leave a Reply

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Scroll to Top

    Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading