தியானத்தின் பலன்கள் / Benefits of Meditation

ஏன் தியானம்செய்ய வேண்டும்? உலகியல் பௌதீக மற்றும் ஆன்மீக வாழ்வில் தியானத்தால் என்ன பலன்?
screenshot 20211106 144556525961802899143193

ஏன் தியானம்செய்ய வேண்டும்? உலகியல் பௌதீக மற்றும் ஆன்மீக வாழ்வில் தியானத்தால் என்ன பலன்?

ஒவ்வொரு மனிதப் பிறவியும் இயற்கையிலேயே தியானம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அனுபவித்து உணர்வதில்லை. குறையாத இன்பமும் அழியாத அன்பும் எப்போதும் எதிர்மறை உணர்ச்சி ஆகாமல் இருக்க வேண்டும் என்பது மனித வாழ்க்கையின் இயல்பான குறைந்த பட்ச தேடுதல் ஆகும்.

Why meditate? What is the benefit of meditation in worldly physical and spiritual life?

Every human being is meditating in nature. But does not enjoy and feel. It is the natural minimum search of human life that less pleasure and indestructible love should not always become a negative emotion.

தியானம் என்பது நாம் அனுபவிக்காத ஒன்றா என்ன? இல்லவே இல்லை. பிறப்பதற்கு முன்னர் இரண்டு மாதங்கள் நீங்கள் தியனத்தில்தான் இருந்தீர்கள். உங்கள் தாயின் கருவில் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தீர்கள்! மந்திரம் ஜெபிக்கவில்லை, பூஜை புனஸ்காரங்கள் செய்யவில்லை. ஆனால் ஆனந்தமாக தியானத்தில் இயற்கையாக லயித்திருந்தோம். உங்கள் உணவைக் கூட சுவைக்க வில்லை, அது உங்களுக்கு உங்கள் வயிற்றுக்கு நேராகவே வழங்கப் பட்டது, இங்குமங்குமாக திரும்பியும் உதைத்தும் நீங்கள் திரவத்தில் மகிழ்வாக மிதந்து கொண்டிருந்தீர்கள். அதுவே தியானம். எதுவும் செய்ய வில்லை. அனைத்தும் உங்களுக்குச் செய்யப்பட்டது. எனவே அத்தகைய சுகமான நிலையை தேடுவது என்பது அனைத்து மனித உயிர்களுக்கும் இயல்பான நிலையே ஆகும். இந்நிலை பெறுவதற்கு தியானம் அவசியமாக உள்ளது.

What is meditation that we do not experience? not at all. You were in meditation for two months before you were born. You were idle doing nothing in your mother’s womb! The mantra is not prayed, the puja is not repeated. But we were naturally immersed in blissful meditation. You didn’t even taste your food, it was delivered straight to your stomach and you were happily floating in the liquid kicking back and forth. That is meditation. Nothing to do. Everything was done for you. So seeking such a state of well-being is a natural state for all human beings. Meditation is essential to attain this state.

உங்களுக்கு அந்நிலை ஏன் தேவைப் படுகிறது தெரியுமா? ஏனெனில், நீங்கள் அந்த வசதியான சுகமான தியான நிலையில் ஓர் சமயத்தில் (தாயின் கருவறையில்) இருந்தீர்கள்.

Do you know why you need that position? Because, you were experienced at that time (in the mother’s womb) in that comfortable blissful meditative state.

“Your daily life should be an extension
of your meditation,  and your meditation as the foundation of your daily life.”

“உங்கள் தினசரி வாழ்க்கை உங்கள் தியானத்தின் நீட்சி, மற்றும் உங்கள் தியானம் உங்கள் அன்றாட வாழ்க்கையின் அடித்தளம்”

தியானம் என்பது முற்றிலும் வசதியான நிலையை அனுபவிக்க செய்யும் செயல். இந்த களேபரமான உலக வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னரே அனுபவித்துவிட்ட அந்த நிலைக்குத் திரும்பச் செல்ல விரும்புவது இயற்கைதானே!!. ஏனெனில் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே (வட்டம்) மீழ்சுற்றுதான். அனைத்தும் மூலத்திற்கே செல்ல விரும்பும். அதுவே உலக இயல்பு. பலசமயம் நமது கர்ம வினையினால் மாயையின் பல்வேறு திரையினால் அந்த இயல்பு மாற்றப்படுகிறது.

Meditation is the act of enjoying a completely comfortable state. It is natural to want to go back to the state you experienced before coming to this glamorous worldly life !!. Because everything in this universe (circle) is reversible. All want to go to the source. That is the nature of the world. Many times that nature is changed by the various screens of illusion due to our karmic reaction.

இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்ந்து விடுகின்றன.மண்ணிற்குச் செல்கின்றன. இயற்கை அவற்றை மறு சுழற்சி செய்ய அதனுடைய சொந்த வழியினைப் பின்பற்றுகின்றது. இயற்கையான மறு சுழற்சி என்பது அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கும் எண்ணப் பதிவுகள் அனைத்தையும் விட்டு, இந்த உலகிற்கு வரும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்களோ அந்த மூலத்திற்கே செல்ல விரும்புவது அல்லது முயல்வதுதான் தியானம். நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் புதுமையாகவும் உயிரோட்டத்துடனும் ஆவதே தியானம். உங்களது இயல்பான குணமாகிய சாந்த நிலைக்குத் திரும்புவதே தியானம். முழுமையான மகிழ்வும் ஆனந்தமுமே தியானம்.

In autumn the leaves fall off and go into the soil. Nature follows its own way to recycle them. Natural recycling is meditation where you want to leave all the thought logs you are adding to your daily life and go back to the source of what you were doing before you came into this world. Meditation is about us becoming innovative and alive every minute of every day. Meditation is the return to your natural healing calm. Meditation is the complete comfortable happiness and bliss.

எழுச்சியற்ற இன்பமே தியானம். பதட்டம் இல்லாத சிலிர்ப்பே தியானம். வெறுப்பில்லாத அன்பே தியானம். தியானம் ஆத்மாவின் உணவு. உணவிற்கு ஏங்குவது இயற்கையே. பசியுடன் இருக்கும்போது தன்னிச்சையாகவே எதையாவது உண்கின்றீர்கள். தாகமாக இருந்தால், நீர் அருந்துகிறீர்கள். அதே போன்று, ஆத்மா தியானத்தை விரும்பி ஏங்குகிறது. அதுவே அனைவருக்கும் இயல்பான ஒன்றாகும்.

Meditation is the unquenchable pleasure. Anxiety-free thrill meditation. Hateless love meditation. Meditation is the food of the soul. It is natural to crave food. When you are hungry you spontaneously eat something. If you are thirsty, drink water. In the same way, the soul longs for meditation. That is something that is normal for everyone.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட ஞானத்தினை வேண்டாதவர் இல்லை. அதை அறிவதில்லை அவ்வளவுதான். எங்கு உணவு கிடைப்பது இல்லையோ அங்கேயே அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம், அதுதான் பிரச்சினை. உங்களது தியானம் கற்று ஆத்மாவிற்கு உணவளியுங்கள்.

There is no one in this universe who does not seek wisdom. But we don’t know about it. We are looking for food where it is not available, that is the problem. Learn your meditation and feed the soul.

இது மிகவும் கடினமானது என்று நீங்கள் உணர்ந்தால்…

இந்த பயணத்தில் எங்கள் உதவியை நீங்கள் விரும்பினால்…

நீங்கள் ஒரு எளிய படிப்படியான அணுகுமுறையை பின்பற்ற விரும்பினால்… உங்களுக்கு குறுக்குவழி மற்றும் வழிகாட்டப்பட்ட அணுகுமுறை தேவையெனில்…

நீங்கள் ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம் சபாவுடன் சேர பரிந்துரைக்கிறேன். இது இந்த நோக்கத்திற்காக சரியாக உருவாக்கப்பட்டது மற்றும் உங்களுக்காக முடிந்தவரை எளிதாக்குகிறது. மேலும் நமது ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம சபையில் சித்த குருமகான்களால் மறைக்கப்பட்ட சக்திவாய்ந்த வித்தைகளை தியான முறைகளை பயிற்றுவித்து பயிற்சி அளிக்கிறது (தந்திர தாந்த்ரீக முறைகளை உள்ளடக்கியது).

If you find this too difficulty …

If you would like our help on this spritual journey…

If you want to follow a simple step-by-step approach…

If you need a shortcut and a guided approach…

I suggest you join Sri Baba Siddhasram Sabha. It was created exactly for this purpose and makes it as easy as possible for you. Also in our Sri Baba Siddhasrama Sabha teaches and practices powerful techniques hidden by the Siddha tradition (including Tantra & Tantric methods).

image editor output image1664573396 16366917889535132818225578094233

For more information and counseling, to learn different types of Meditation &  Tantric techniques contact Sri Baba Siddhasrama Sabha – 9791476947

மேலும் தகவல்கள் மற்றும் ஆலோசனை சிகிச்சை,  பலதரப்பட்ட தியான வகைகள் & தந்திர தாந்த்ரீக வித்தைகளை கற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம சபையை தொடர்பு கொள்ளுங்கள். 9791476947


Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop
Scroll to Top

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading