பஞ்சலோகம் பயன்களும் பயன்பாடுகளும் Benifits & Uses of Famine Metals
பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.
Famine Metals (Panchalokam) means five types of metal.
Panchalokam is an alloy of gold, silver, copper, iron and lead.
இதில் தங்கம் குருவின் சக்தியையும்,
வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,
செம்பு சூரியனின் சக்தியையும்,
இரும்பு சனியின் சக்தியையும்,
ஈயம் கேதுவின் சக்தியையும் கொண்டு
ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.
Five metals greatly contribute to human health. In which Gold is the power of Jupiter, Silver is the power of Venus, Copper is the power of the sun, Iron is the power of Saturn, Lead is the power of ketu (Shadow planet).
ஐம்பொன் உலோகங்களை அணிகலன்களாக அணியும் போது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும் சமன் செய்கிறது. உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி மற்றும் ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் பெறிதும் துணை புரிகின்றது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது.
The famine metals are balances the deficient forces and nutrients in the body when wearing as ornaments. The Famine Metals also helps to absorb the cosmic energy required to the royal organs through the nerves in the body and to obtain the soul power, mental power, cognitive power and masculine power required by the body. It has the power to make the senses in our body function properly.
வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தமும், உடல் சுறுசுறுப்பும் அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும், சித்தர்களும் இதை அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன்படுத்தி உள்ளனர். பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது உடலுக்கு பெரும் பயனளிக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
When the magical vibrations of mantra (worship) and the five metallic powers are acquired in the body, the mind prevails in thought and attains serenity and physical vitality. Our spiritual elders and Siddhas have been using this knowingly for centuries. It has been scientifically proven that wearing jewelry in Panchaloka is of great benefit to the body.
நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது. அதாவது மண்ணில் உள்ள இந்த சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும். இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரின் உடலுக்கும் பிரதிபலிக்கும்.
இதை புரிந்து கொண்டதனால் தான் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை.
The area where we live is generally found in soils with low metal content. This means that these nutrients in the soil get into our body through water and food. This defect is reflected in nature and in the body of the man who lives here.
Understanding this, there is no doubt that the ancient people recommended the use of Panchaloka.
பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
ஐம்பொன்சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,எனறும் மருத்துவ ரீதியாக பெரிதும் பயன் என்று நம் பெரியோர்கள் கருதினர்.
The power of Panchaloka strengthens the prana energy that surrounds the human body and also increases the metal power in the body.
Our elders believed that if there was an anointing offering available for idols, its nutrients would be fully available, and that it would be of great medical use.
பொதுவாக உடலை பிண்டம் என்போம். பூமி உள்பட பிரபஞ்சத்தை அண்டம் என்போம்.
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது சித்தர் வாக்கு.
இதனை அன்றே உணர்ந்த அறிவுபூர்வமான நமது முன்னோர்கள் தங்கள் உடலில் எப்போதும் இந்த உலோகங்கள் எப்பொழுதும் உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்து வந்தனர்.
Usually called our body as mass. We call the universe, including the earth.
The Siddhar vote is that what is in the universe is also in the body.
Our wise forefathers, who realized this on that day, always wore an ornaments of punchaloga in their body so that these metals were always present in the body and connect with universe.
இந்த உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையை செய்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்த்து நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை.இந்த ஐம்பொன் ஆபரனகளுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது.
They realized that these metals do the magic work of connecting our body to the universe.
It is a scientific fact that wearing these metals attracts the nutrients in the metal to our body and directs us.
These Famine Metal (Panchalokam) accessories have a high magnetic field.
வழிபாட்டின் போது மந்திர அதிர்வுகளை ஈர்த்து இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமனப்படும்.
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது.
மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது.
இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
Hundreds of years ago, they discovered and activated such a miraculous metal that could be used to attract people with magical (mantra) vibrations during worship.
Wearing such a special metals as a ring or bracelet for the hands will equalize the body temperature.
The important nervous system point in the ring finger is the one that controls our subtle senses.
Also there are 5 important nerve points in our wrist area. It transmits the flow of energy from the fingertips to the royal organs.
ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி, முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும். இராஜ உறுப்புகளான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தும், தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும். வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். கண் திருஷ்டியை போக்கும். மற்றும் தீய சக்திகள் (ஆவிகள்,ஏவல் சக்திகள், மந்திரம், எந்திரம்), செய்வினை செய்தாலும், ஐம்பொன் உலோகம் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. இப்படி முன்னோர்கள் கடைபிடித்த எளிய வழிமுறைகளை பின் பற்றி ஐம்பொன் உலோகங்களை அணிந்து உடலை காக்கலாம்.
Wearing fancy jewelry or bracelets will take the energy out of the universe and make a chemical transformation, enabling our royal organs to thrive through vital nerve points. Stimulates the function of the vital organs such as the heart, brain, lungs, kidneys and liver. Also cleanses the blood and prevents skin diseases. Regulating blood pressure. Reducing pain and body heat.
Cures neurological diseases. And even if evil spirits (spirits, evil forces, magic, machine) do the work, the use of such metal will have no effect on the body. Thus the simple steps followed by the ancestors can be followed to protecting the body energy by wearing Panchaloka metals.
Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST
Subscribe to get the latest posts sent to your email.