
உங்கள் மொத்த மன சக்தியில், 4% உங்கள் நனவான மன சக்தியாகவும் (Conscious mind), 96% உங்கள் ஆழ் மன சக்தியாகவும் (subconscious mind) இருக்கிறது. எனவே, உங்கள் ஆழ்மனதை உபயோகிக்காமல் இருப்பதால் ஆழ் மனதில் உருவாக்கும் திறன் (கிரியா சக்தி / manifestation) மிகவும் குறைவாக உள்ளது. நமது ஒவ்வொரு விருப்பமும் நமது உணர்வுபூர்வமான (Emotional mind) மனதின் ஆசையே. நமது நனவான மனம் (Conscious mind), உணர்வு அல்லது விழிப்புணர்வு (Emotional mind), தூக்கம் மற்றும் கனவு நிலை (Dream state mind) ஆகிய 3 நிலைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் மனதின் 4% நிகழ்வாகும்.
நாம் நமது 96% ஆழ் மன சக்தியை உபயோகிக்க கற்றுக்கொண்டால், ஆழ் மனதில் உருவாக்க கற்றுக் கொண்டால், நம் வாழ்வில் நாம் விரும்பும் ஒரு சூழ்நிலையை நம்மால் உருவாக்க முடியும். நம் வாழ்வில் இருக்கும் சூழ்நிலைகளை மாற்றும் சக்தி நம்மிடம் உள்ளது. வாழ்க்கையில் குறிக்கோள்களை உருவாக்கவும் அதை அடையவும் முடியும்.
ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டுமே தடுக்கிறது. ஆழ் மனதில் நுழைவது எப்படி?? ஆழ் மனதில் உருவாக்குவது எப்படி??

ஆழ்மனம் உங்களுக்குள் புதைந்திருக்கும் ஒரு மாபெரும் புதையல். நீங்கள் புகழோடும் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் வாழ தேவையான அளவற்ற செல்வங்களும் அன்பும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உங்களுக்கு உள்ளேயே வைத்திருக்கிறீர்கள். அந்த புதையலை தோண்டும் பணியே தியானம்.

மேலும் அறிய, ஸ்ரீ பாபா சித்தாஷ்ரம சபையின் வாழ்க்கையை மாற்றும் தியானப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளுங்கள்.
தங்களின் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். Subscribe & Followup செய்து தகவல்களை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணில் உடனடி லிங்க் பெருங்கள்.
எங்கள் வாராந்திர மன்றங்களில் (Weekly forums) (Every Sunday 6:00 pm) சத்சங்கத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்.
ஸ்ரீ பாலா சித்தாஷ்ரம்
Mobile: 9791476947
managuruanathan@gmail.com
வாட்ஸ்அப் & அலைபேசி: 9791476947
https://m.facebook.com/profile.php?ref=bookmarks
FB Page: Sri Baba Siddhashram Saba
Discover more from SRI VIDYA SRI PEEDAM TRUST
Subscribe to get the latest posts sent to your email.


Pingback: MIND POWER – Sri Baba Siddhashram Saba